அரியலூர், ஜூலை 28- அரியலூர் நகரில் சிவன் கோவில் தெரு மற்றும் திரு மானூர் ஒன்றியம் சுள்ளங்குடி கிராமம், தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீபுரந்தான் கிராமம் ஆகிய 3 பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் உடல் நிலை சரியில்லாமல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த தில் அவர்களுக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலை யில் அவர்கள் 3 பேரும் திங்களன்று சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தனர். ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்ததால் அந்த எண்ணிக்கை தற்போது 9 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது அரியலூர் மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.