tamilnadu

சிப்பிப்பாறை பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

வெம்பக்கோட்டை, மார்ச் 21- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள சிப்பிப்பாறையில் பட்டாசு ஆலை வெடி விப த்தில் பலியானோர்  எண்ணி க்கை ஒன்பதாக உயர்ந்து ள்ளது. விபத்தில் படுகா யமடைந்த பலர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவ ருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிப்பாறையில் இயங்கி வந்தது. இந்த ஆலையில் ஐந்துக்கும் மே ற்பட்ட அறைகள் உள்ளன.  வெள்ளியன்று  தொழிலா ளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த னர். அப்போது, வேதிப் பொருட்களை பட்டாசுகளில் செலுத்தும் போது, திடீரென உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையின் அறைகள்  தரைமட்டமாகின. ஆலையில் பணியாற்றிய தென்காசி மாவட்டம்  மைப்பாறையைச் சேர்ந்த   இராணி (42), ஜெயபாரதி (40), பத்திரகாளி (33), தாம ரைச்செல்வி (35), தங்க ம்மாள் (39), வேலுத்தாய்(43), கொலகட்டா குறிச்சியை சேர்ந்த காளியம்மாள் (63) ஆகிய ஏழு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர்.   ஒன்பது பேர் பலி : படுகா யமடைந்த  பத்து தொழிலா ளர்கள்  கோவில்பட்டி அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு செல்லப்ப ட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்குபட்டியைச் சேர்ந்த முருகையா (57)  உயிரிழந்தார். மண் அள்ளும் இயந்திரம்  கட்டட  இடிபாடுகளை அகற்றிய போது, அதில் கழுகும லையைச் சேர்ந்த கக்கன் மகன் குருசாமி(42)  உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து பலி எண்ணிக்கை ஒன்பதாக ஆக உயர்ந்துள்ளது.  இருவர் கைது : இந்த  விபத்து குறித்து  பட்டாசு  ஆலை குத்தகைதாரர்களான செவல்பட்டியைச் சேர்ந்த  மகேஸ்வரன், மதியழகன்  ஆகியோரை ஏழாயிரம்ப ண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.