tamilnadu

img

ஆந்திர மாநிலத்தில் 5 துணை முதல்வர்கள் நியமிக்க முடிவு

ஆந்திர மாநிலத்தில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியில் அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி, 151 இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார். இதை அடுத்து அம்மாநிலத்தில், அவர் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனது அமைச்சரவையில், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் காப்பு சமூகத்தினர் என சாதி அடிப்படையில் 5 துணை முதல்வர்களை நியமிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த 5 துணை முதல்வர்கள் உட்பட 25 பேர் நாளை பதவியேற்கும் நிலையில்,, இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் தமது அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் எனவும் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.