tamilnadu

img

அடுத்த சில வருடங்களில்10 லட்சம் உயிரினங்கள், தாவரங்கள் அழிவை சந்திக்கவுள்ளதாக ஐ.நா. தகவல்

உலகம் முழுவதுமுள்ள இயற்கை அமைப்பின் நிலை குறித்த ஆய்வு அறிக்கையின் மூலம் ஐக்கிய நாடுகள் சபை இன்று தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையில் சுமார் 450க்கும் அதிகமான இயற்கை வல்லுநர்கள் கொண்ட குழு ஒன்று உலகம் முழுவதும் நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து ஐ.நா.வில் ராபர்ட் வாட்சன் தலைமையில் 132 நாடுகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசனை நடத்தியது.


அந்த ஆய்வு அறிக்கையில் மூலம் அடுத்த சில வருடங்களில் 10 லட்சம் வன உயிரினங்கள், மரங்கள் அழிவை சந்திக்கவுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அதிலும் பெரும்பான்மையானவை வரும் 10 ஆண்டுகளில் உயிரிழக்கும் என கூறியுள்ளது. கடந்த 10 மில்லியன் வருடங்களில் வன உயிரினங்களின் அழிவு 100ன் அடுக்கு 10 என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.