tamilnadu

img

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீண்டும் கைது!

மதுரையில் செல்போன் பேசியபடி காரை வேகமாக ஓட்டி சென்ற யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மதுரை அண்ணா நகர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதுரையில் செல்போன் பேசியபடி காரை வேகமாக ஓட்டி சென்ற வீடியோ ஒன்றை டிடிஎஃப் வாசன் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மதுரை மாநகர ஆயுதப்படை எஸ்.ஐ-யும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை மதுரை அண்ணா நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.