அரசு தொழில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் வாலிபர் சங்க திருவாரூர் ஒன்றிய மாநாடு கோரிக்கை
திருவாரூர், ஜூலை 20 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் ஒன்றிய 19 ஆவது மாநாடு கூடூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் கலையரசன் தலை மையில் புலிவலம் கடைத்தெரு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் பேரணியாக சென்று மாநாட்டில் பங்கேற்றனர். பேரணியை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் கொடிய சைத்து துவக்கி வைத்தனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியி டங்களை நிரப்பி, உயர்தர சிகிச்சைக்கான உபகரணங்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். திருவாரூர் ஒன்றியத்தில் அரசு தொழில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும். தஞ்சை, நாகை சுற்றுவட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவாரூர், திருத்துறைப்பூண்டி அரை வட்டச் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக அன்புச்செல் வன், செயலாளராக இளையராஜா, பொரு ளாளராக விஜயகுமார், துணை தலைவராக ஆர்.எஸ்.சிற்றரசன், துணைச் செயலாளராக கே.எஸ்.கோசி மணி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.