நிலம் அபகரிப்பு முயற்சியில் இருளர் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல்
தருமபுரி, ஜூலை 3 - தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திலுள்ள குழிப்பட்டி கிரா மத்தில் நிலம் அபகரிக்கும் நோக்கத்து டன் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய கொடூரமான சம்பவம் நடை பெற்றுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு ட்பட்ட குழிப்பட்டி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட இருளர் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருளர் சமூ கத்தைச் சேர்ந்த முருகன்-தெய்வா னை தம்பதியருக்கு பூர்வீக சொத்தாக 50 சென்ட் பட்டா நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கேழ்வரகு, நிலக்கடலை பயிரிட்டு வாழ்வாதாரம் நடத்தும் இக்குடும்பத்தின் நிலத்தை அபகரிக்க அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் “சாலை அமைக்க வேண்டும்” என்ற பெயரில் தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக தெரிகிறது
கொடூரமான தாக்குதல்
ஜூன் 10 ஆம் தேதி செல்வம் முருகனின் நிலத்தில் சாலை அமைக்க டிராக்டரை வரவழைத்தார். இதனை எதிர்த்து தெய்வானை டிராக்டருக்கு வழிவிடாமல் குறுக்கிட்டபோது, செல்வம் டிராக்டரை தெய்வானை மீது ஏற்றி கீழே தள்ளிவிட்டார். அடுத்ததாக செல்வம், அவரது மனைவி கோவிந்தா மற்றும் மகன்கள் வீரமணி, பிரபு ஆகியோர் சேர்ந்து தெய்வானையின் மேலாடைகளை முழுவதும் அவிழ்த்துவிட்டு நிர்வாண நிலையில் கல்லால் அடித்து கடுமையாக காயப்படுத்தியுள்ளனர். இதில் தெய்வானையின் இடுப்பு விலா எலும்பு, பக்கவாட்டு எலும்பு உடைந்துவிட்டது.
சாதிய அவமதிப்பு
இந்த தாக்குதலை தடுக்க வந்த முருகனை சாதி பெயரை சொல்லி அவமதித்து ஆபாசமாக திட்டி யுள்ளனர். முருகனின் தாயார் கோவி ந்தையும் செல்வத்தின் அடியாட்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
தொடர் அத்துமீறல்
பாதிக்கப்பட்டவர்கள் முதலில் பென்னாகரம் அரசு மருத்துவமனை யிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது செல்வம் அவர்களது நிலத்தில் தென்னை, தேக்கு, கொய்யா செடிகளை அழித்து 10 அடி நீளத்திற்கு சாலை அமைத்துள்ளார். மேலும் மரு த்துவமனைக்கு வந்த பாதிக்கப்பட்ட வர்களின் உறவினர்களின் செல்போன்க ளையும் பிடுங்கி தாக்கியுள்ளனர்.
தலைவர்கள் ஆறுதல்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பென்னாகரம் மேற்கு ஒன்றிய செய லாளர் ஆ.ஜீவானந்தம் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். காவல்துறை நடவடிக்கை பென்னாகரம் காவல்துறையினர் செல்வம், வீரமணி, பிரபு, கோவிந்தா மற்றும் பெயர் தெரியாத இரண்டு நபர்கள் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இது சாதாரண பிரிவுகளில் பெயரளவிற்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மலைவாழ் மக்கள் சங்கத்தின் கே.என்.மல்லையன் கூறுகையில், “இது வெறும் நிலத் தகராறு அல்ல. இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியது, சாதி பெயர் சொல்லி அவமதித்தது, கொலைக்கு முயற்சித்தது என பல்வேறு கோணங்களில் இது சாதிய வன்கொடுமையாகும். எனவே எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.” என்றார். பாதிக்கப்பட்டவரின் முறையீடு “என்னுடைய சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி அடித்தனர். என் மனைவியை பெண் என்றும் பாராமல் நிர்வாணமாக்கி கல்லால் அடித்தனர். அவளால் எழுந்து நடக்க முடியாத நிலை. செல்வத்தால் எங்கள் உயி ருக்கு ஆபத்து உள்ளதால் பயந்து வாழ்கிறோம்” என்று முருகன் தெரிவித் தார். இந்த சம்பவம் சாதிய வன்கொடு மையின் கொடூரமான வெளிப்பாடாக உள்ளது. நிலம் அபகரிப்பு, பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல், சாதி அவமதிப்பு என பல்வேறு கோணங் களில் இந்த சம்பவம் கண்டிக்கத்தக்க தாக உள்ளது. இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே மலைவாழ் மக்களின் கோரிக்கையாகும். (ந.நி.)