பெண் வழக்கறிஞர் வீடியோ வழக்கு உணர்ச்சிமயமான நீதிபதி
சென்னை, ஜூலை 10- பெண் வழக்கறிஞர் ஒருவரின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரை நேரில் சந்தித்து “கண்கலங்காமல் தைரி யமாக இருக்க வேண்டும்” என ஆறுதல் கூறினார். அப்போது, அவர் உணர்ச்சிமயமானார். இது நீதிமன்ற அறையில் இருந்தவர்களையும் கலங்கச் செய்தது. குடி மக்கள் அனைவரின் அடிப்படை உரிமைகளை பாது காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும், இதுபோன்ற வழக்குகளில் தமிழக காவல்துறை யினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை, ஜூலை 10- சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வியாழக்கிழமை (ஜூலை 10) சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை; நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக ஆணையர் விளக்கம் அளித்தார்.
5 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு முடித்து வைப்பு
சென்னை, ஜூலை 10- கடலூரில் கோயில் நில வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்ட 5 ஐஏஎஸ் அதி காரிகள் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) நேரில் ஆஜராகினர். அப்போது, அதிகாரிகள் மன்னிப்பை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
தூங்கியதாக கூறி கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
சென்னை, ஜூலை 10- கடலூர் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன், கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயி ரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து, அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் லெவல் கிராசிங் பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது, அப்போது, கார்த்திகேயன், ஆஷிஷ் குமார் ஆகிய 2 கேட் கீப்பர்கள் பணியின் போது தூங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணிநேர பணியைத் தாண்டி, தூங்குவதற்குக் கூட நேரமில்லாத வகையில், தொடர்ந்து 24 மணிநேரம் பணி யாற்றுமாறு அதிகாரிகள் தங்களைக் கட்டாயப்படுத்து வதாக கேட் கீப்பர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மல்லை சத்யா மீது வைகோ குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 10 - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கட்சியிலிருந்து வெளியேறியவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், கட்சிக்கு எதிராக செயல்படுவ தாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள் ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருப்பதாகவும், அவர் கட்சி விமர்சகர்களுக்கு உள்ளடக்கம் வழங்குவ தாகவும் வைகோ தெரிவித்துள்ளார். மறுபுறம் மல்லை சத்யா, வைகோ தனக்கு துரோகி பட்டம் கொடுத்து கட்சி யிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார் என கூறியுள்ளார். வைகோவின் உயிரை மூன்று முறை காப்பாற்றியவர் தானென்றும், இப்போது அவர் தனது மகன் துரை வைகோவுக்காக தன்னை பலி கொடுக்க முயற்சிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
கிராமப்புற பெண்களுக்கு வட்டி மானியக் கடன் புதிய திட்டம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 10 - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு புதிய கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிணையம் எதுவும் இன்றி 75 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப் படும். வேளாண் சார்ந்த தொழில்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு இந்த கடன் அளிக்கப்படும். கடன் தொகையை தவணை தவறாமல் திருப்பிச் செலுத்தும் பெண் தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியில் 2 சதவிகிதம் மானியமாக வழங்கப்படும். தகுதியான உறுப்பினர்கள், தங்கள் பகுதியிலுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது வங்கிக் கிளையை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் நான் தான்: தேர்தல் ஆணையத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்
சென்னை, ஜூலை 10 - பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் தானே தலைவ ராக செயல்படப் போவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, கட்சியின் பொதுக்குழு மூலம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர் என தெரிவித்தார். இதையடுத்து, பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறி வித்தார். தொடர்ந்து செயற்குழுக் கூட்டத்தில் வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் ராமதாஸ் கையெழுத்திடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் மே 28-ஆம் தேதி யுடன் நிறைவு பெற்றதாகவும், மே 29 முதல் அப்பொறுப்பை ராமதாஸ் ஏற்றுக் கொண்ட தாகவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இனிசியலுக்கு மட்டும் எனது பெயரை அன்புமணி பயன்படுத்தலாம்
“தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, என் பேச்சை கேட்காதவர் எனது பெய ரை பயன்படுத்தக் கூடாது. அன்பு மணி பெயருடன் எனது பெயரை போடக் கூடாது” என டாக்டர் ராமதாஸ் கூறியுள் ளார். தந்தை என்ற வகையில் “இனிசியலை மட்டும் போட்டுக்கொள்ளலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.