41 பேர் உயிரிழப்பு கண்டு அழுதது ஏன்? திருக்குறள் மூலம் பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலின்போது, 41 பேர் உயிரி ழந்தது கண்டு அமைச்சர் அன்பில் மகேஸ் அழுத நிலை யில், அதனையும் கூட விமர்சித்து அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். இதற்கு திருக்குறள் மூலம் பதிலளித்துள்ளார், அமைச்சர் அன்பில் மகேஸ். தேம்பித் தேம்பி அழும் அமைச்சருக்கு ஆஸ்கர் விருது வழங்குமாறு ஆஸ்கர் நிறுவனத்தை கேட்டுக் கொள்வதாகக் கூறியிருந்தார். இதற்கு, வளர்த்து ஆளாக்கி விட்ட சொந்த தந்தை யைக் கூட கொச்சைப்படுத்துபவர்களின் கருத்தைப் பொருட்படுத்த தேவையில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அப்போதே பதிலளித்திருந்தார். இந்நிலையில், அன்புமணியின் விமர்சனம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அன்பில் மகேஸ் மீண்டும் பதிலளித்துள்ளார். அதில், ‘உணர்ச்சிகளும் அறிவும் சேர்ந்த ஒருவன் தான் மனிதன்’ என திருவள்ளுவர் கூறியிருப்பதாகவும், உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றிப்போனால் அது விலங்குக்குச் சமமானது என்றும், அறிவு அதிகமாகி உணர்ச்சி இல்லாமல் போனால் அது மரத்திற்குச் சம மானது என்றும் திருக்குறள் விளக்குவதாகக் தெரிவித் துள்ளார். முதலில் நாம் எல்லாம் மனிதர்கள் என்றும், பாதிப்பு ஏற்பட்டால் மனம் கலங்குவது மனிதனின் இயல்பான குணம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் குறிப்பிட்