tamilnadu

img

நெல்லை பதிப்பு காணும் “தீக்கதிர்”க்கு வாழ்த்து - ஆர்.நல்லகண்ணு

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்ட்) “தீக்கதிர்”  நாளிதழ் நெல் லை மாநகரில் ஐந்தாவது பதிப்பை கொண்டு வருவது அறிந்து மிகவும் மகிழ்வடைந்தோம். நாம் வாழும் நவீன காலத்தில் செய்தி தொழில்நுட்பம் வியக்கத்தக்க அளவில் வளர்த்துள்ளது. அது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் சமூக ஊடக மாக வளர்ந்து வருகிறது. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங் களாக வளர்ந்து, இன்று  எண்ணியல் ஊடக மாக, இணைய வலை தளங்களில் விரிந்து வருகிறது. இதனால் அச்சு ஊடகங்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் அரசியல் கட்சி ஒரு நாளி தழை வெற்றிகரமாக நடத்தி வருவது, அது வும் வர்க்கப்பார்வையுடனும், சமூக விஞ் ஞான கண்ணோட்டத்தோடும் ஒரு நாளி தழை நடத்துவது பெரும் சாதனையாகும். செய்தித்தாள் என்பது ஆசிரியராக, பரப்புரையாளராக, அமைப்பாளராக, கிளர்ச்சியாளராக பன்முகப் பணிகளை மேற்கொள்ளும் என்று மேதை லெனின் கூறுவார். இந்தத் திசை வழியில் 60 ஆண்டு களுக்கு முன்பு வார இதழாக மலர்ந்து, பின்னர் நாளிதழாக வளர்ந்து, மதுரை, சென்னை, கோவை, திருச்சி என கிளை பரப்பி, ஐந்தாவது பதிப்பாக திருநெல் வேலி மாநகரில் வெளிவரும் “தீக்கதிர்” மென்மேலும் வளர்ந்து, அதன் நோக்கத் தில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து கிறோம்.