புதுச்சேரி உட்பட இந்திய நாட்டின் கடற்கரைகள், மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க போராடுவோம்!
சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி உறுதி
சென்னை, ஜூலை 12 - புதுச்சேரி உள்ளிட்ட இந்திய நாட்டின் கடற்கரையையும் மீனவர் களின் வாழ்வாதாரத்தையும் பாது காக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தெரி வித்தார். நீலப் பொருளாதாரம் பெயரில் சதித் திட்டம் புதுச்சேரி உள்ளிட்ட இந்திய கடற்கரை வளங்களை கார்ப்பரேட்டு களுக்கு தாரை வார்க்கும் முதற்கட்ட மாக நீலப் பொருளாதாரத்தை செய லுக்கு கொண்டுவரும் சதித்திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறு கிறது. குறிப்பாக, இந்திய ஒன்றிய அரசும், நார்வேயும் ஒன்றிணைந்து புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்க ளில் அதற்கான ஆய்வுகளை மேற் கொண்டு வருகின்றனர். கடல் இடம் சார்ந்த திட்டம் (Marine Spatial Plan) என்ற பெயரில். கடலில் உள்ள பல்வேறு வளங்களை (எண்ணெய், எரிவாயு மற்றும் இதர கனிமங்களை) மண்ட லங்களாக பிரித்து கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு தாரைவார்க்க உள்ளனர். மீனவர்களின் கருத்தைக் கேட்காத மோடி அரசு மக்களிடமோ, மீனவர்களிடமோ இதுதொடர்பாக இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மீனவர் களின் பொதுச்சொத்துக்களை சூறை யாட கார்ப்பரேட் நிறுவனங்கள் காத்தி ருக்கின்றனர். அதேநேரம், மலைவாழ் மக்களைப் பாதுகாக்க வனப் பாதுகாப்பு சட்டம் போல, மீனவர்களைப் பாதுகாக்க கடல் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. எனவே, ஒன்றிய பாஜக அரசின் கடல் இடஞ்சார்ந்த திட்ட நடவடிக்கை கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களின் பொதுச் சொத்துக் கள் (பாரம்பரிய பயன்படுத்தும் இடங்கள்) குறித்த ஆய்வு அறிக்கை யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியிடம், சனிக்கிழமை (12.07.2025) அன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நேரில் அளிக்கப்பட்டது. கடல்சார் வளங்களைக் காக்க போராடுவோம் அப்போது, கடல்சார் வளங்களை யும், மீனவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் போராட்டங்கள் தொடர் பாக எம்.ஏ. பேபி ஆலோசனைகளை வழங்கினார். புதுச்சேரி உள்ளிட்ட இந்திய நாட்டின் கடற்கரையையும் மீன வர்கள் வாழ்வாதாரத்தையும் பாது காக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து அனைத்து வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார். இந்த சந்திப்பில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் மற்றும் பிரபாகர், அருண்குமார், பகத்சிங் ஆகியோர் பங் கேற்றனர்.