மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம், அக்.11- காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், பெய்து வரும் மழையின் காரணமாக மேட் டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 29,540 கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 6,033 கனஅடி விகிதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து சனிக்கிழமை காலை விநா டிக்கு 29,540 கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளிக் கிழமை 111.48 அடியாக இரு
தில்லியில் 5 நாட்கள் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி!
புதுதில்லி, அக்.11- காற்று மாசுபாடு காரணமாக, புது தில்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீபாவளிக்கு மட்டும் 5 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு உத்தர விட்டுள்ளது. புது தில்லியில் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பட்டாசு வெடிப்பது என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டி ருக்கும் நிலையில் தீபாவளிக்கு மட்டும் இந்த தடை உத்த ரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புது தில்லியில், காற்றுமாசு கடுமையாக இருந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்றும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால், தில்லி யில் பட்டாசுகளை தயாரிப்பது, சேமிப்பது, விற்பனை செய்வது, ஆன்லைனில் விற்பது, வெடிப்பது என அனைத்துக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தில்லியில் தற்போது காற்று மாசுபாடு சற்றுக் குறைந்திருக்கும் நிலையில், சுமார் ஐந்து ஆண்டுக ளுக்குப் பின், புது தில்லியில் இந்த ஆண்டு தீபாவளி யன்று பட்டாசு வெடிக்க அனுமதி கிடைத்திருக்கிறது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டா டும் வகையில், தடை உத்தரவை தளர்த்தலாம் என ஒன்றிய அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மீண்டும் மனு!
சென்னை, அக். 11- கரூரில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்-யின் பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு வை கடந்த மூன்றாம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் தள்ளு படி செய்த நிலையில், மீண்டும் அவர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு முதற்கட்டமாக பட்டியலிடப்பட்ட பின்னர், விசாரணைக்கான தேதி விரை வில் நிர்ணயிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.