tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழக ஏரிகளின் நீர் இருப்பு விவரம்

சென்னை, அக். 22- தமிழ்நாட்டில் மொத் தம் 38 மாவட்டங்களில் 14,141 ஏரிகள் உள்ளன.  இவற்றில் அதிகபட்ச மாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,040 ஏரி கள் உள்ளன. அதேசம யம், நீலகிரி மாவட்டத் தில் ஏரிகள் எதுவும் இல்லை. தற்போதைய நீர்நிலை விவரங்களின் படி, 1,522 ஏரிகள் நூறு  சதவிகிதம் நிரம்பி யுள்ளன. 1,842 ஏரிகள் 76 முதல் 99 சதவிகிதம் வரை நிரம்பியுள்ளன. 2,253 ஏரிகள் 56 முதல் 75  சதவிகிதம் வரை நிரம்பி யுள்ளன. 3,370 ஏரிகள் 26 முதல் 50 சதவிகிதம் வரை நிரம்பியுள்ளன. 4,534 ஏரிகள் 1 முதல் 25  சதவிகிதம் வரை நிரம்பி யுள்ளன. 620 ஏரிகள் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளன.

திருச்சி காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!

திருச்சிராப்பள்ளி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  தொடர்ந்து பருவமழை பெய்து வருவதாலும் மேட்டூர்  அணை முழுக்கொள்ளளவில் இருப்பதாலும் அணைக்கு வரும் நீர்வரத்தைப் பொருத்து எந்த நேரத்தி லும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும்  கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு  அதிகரிக்க வாய்ப்புள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சி யர் வெங்கடேசன் சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோர மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லவும், சலவைத் தொழிலா ளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி  மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச் செல்லவோ  வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூரில் சுவர் இடிந்து விழுந்து தாய் - மகள் பலி!

கடலூர்: கடலூர் மாவட்டம் முழுவதும் புதனன்று காலை வரை கனமழை பெய்த நிலையில் சிதம்பரம் அருகே ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சுவர் இடிந்து, அசோதை, அவரது மகள் ஜெயா ஆகிய இரு வரும் பலியாகினர். இவர்கள் தங்களின் குடிசை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அருகிலிருந்த ஓட்டு வீட்டின் சிமெண்ட் சுவர் இடிந்து குடிசை மீது விழுந்துள்ளது. இதில், குடிசைக்குள் இருந்த அசோதையும் ஜெயா வும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு  இடிபாடுகளை அகற்றியும் அசோதையையும் ஜெயா வையும் உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. புதுச்சத்திரம் போலீசார், இருவரின் சடலங்களை யும் மீட்டு உடற்கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும் மகளும் ஒரே நேரத் தில் உயிரிழந்த சம்பவத்தால் ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ஒகேனக்கல்லில் குளிக்கத் தடை!

சேலம்: கர்நாடக மாநி லத்தின், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரண மாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதி கரித்துள்ளது. செவ்வாய்க் கிழமை காலை 6 மணி நில வரப்படி ஒகேனக்கல் லுக்கு நீர்வரத்து விநா டிக்கு 24,000 கன அடியாக  அதிகரித்த நிலையில், புதனன்று அது 32,000  கன அடியாக உயர்ந்து உள்ளது. நீர்வரத்து அதி கரிப்பால் மெயின் அருவி,  சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டு கிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான   மழைப் பொழிவு விவரம்! சென்னை: தமிழகம் -  புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில், அதிகபட்சமாக, புதுச்சேரி காலாப்பட்டில் 25 செ. மீட்டர் மழையும், தமிழ கத்தில் கடலூரில் 17.4 செ. மீட்டர் மழையும் பதி வாகியிருக்கிறது. மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் குறிப் பிடத்தக்க அளவு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி பகுதியில் 12.3  செ.மீட்டர் மழையும், திரு வள்ளூர் மாவட்டம் ஆவடி யில் 16.7 செ.மீட்டரும், திருவாலங்காட்டில் 16.2  செ.மீட்டரும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 10.3 செ.மீட்டரும், ராணிப் பேட்டை மாவட்டம் கள வாயில் 9.94 செ.மீட்டரும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 9.82 செ. மீட்டரும் மழை பதிவாகி யுள்ளது.