தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சிஐடியு மதுரை மண்டலத்தின் சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணி வெள்ளியன்று நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் கே.சண்முகம், மண்டலத் தலைவர் கே.கதிரேச பாண்டியன், மண்டலப் பொருளாளர் அழகு லெட்சுமணன்,துணைத் தலைவர் கல்யாணகுமார், துணைச் செயலாளர் பாஸ்கரன்,ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.