tamilnadu

img

மண் எடுக்க அனுமதி வழங்கிய திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மண் எடுக்க அனுமதி வழங்கிய  திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஆக 3-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் பரமேஸ்வரி, பல கிராமங்களுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கியதன் காரணமாக, விளைநிலங்களில் மண்ணெடுத்து விற்பனை செய்வதாலும், மண் எடுக்க பயன்படுத்தும் வாகனங்களுக்கும், ஓட்டுநருக்கும் எந்த உரிமமும் இல்லாமல் பயன்படுத்துகின்றனர். வாகனங்கள் அதிவேகமாக செல்வதாலும், விவசாய நிலங்கள் முழுவதும் பாதிக்கப்படுகிறது என குற்றம்சாட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகரத்தின் முக்கிய சாலை வழியாக ஊர்வலம் வந்து திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முல்லைவளவன், பூமிநாதன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து மண் எடுப்பதை முறைப்படுத்த வேண்டி, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். நகரச் செயலாளர் ஹாஜா நன்றி கூறினார்.