tamilnadu

img

பாடத் திட்டத்தில் சர்ச்சைக்குரிய மாற்றம் குறித்து கேள்வி பதிலளிக்காமல் நழுவிய ஒன்றிய அமைச்சர்

பாடத் திட்டத்தில் சர்ச்சைக்குரிய மாற்றம் குறித்து கேள்வி  பதிலளிக்காமல் நழுவிய ஒன்றிய அமைச்சர்

முட்டுக் கொடுத்த அண்ணாமலை

திருப்பூர், ஜூலை 18 - புதுத் திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்காவுக்கு வருகை தந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், என்சிஇஆர்டி பாடத் திட்டத்தில் சர்ச்சைக்குரிய மாற்றம் செய்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச்  சென்றார். அவருடன் வந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவர் அமைச்சராக வரவில்லை; சம்பல்பூர் எம்.பி.யாக  வந்திருக்கிறார் என்று முட்டுக் கொடுத்து, அமைச்சரை அழைத்துச் சென்றார். திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சியில் அமைந்திருக்கும் புதுத்திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்காவுக்கு வெள்ளி யன்று வந்தார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். அவருடன் பாஜக தலைவர் நயினார்  நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவா சன் எம்எல்ஏ., மொடக்குறிச்சி சரஸ்வதி எம்எல்ஏ., உள்ளிட்டோர் வந்தனர். நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்காவில் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கத் தலைவர் கே.என்.சுப்பிரமணி யத்திற்குச் சொந்தமான கே.எம்.நிட்வேர் தொழி லகத்தை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர்  தர்மேந்திர பிரதான் கூறுகையில், ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அங்கு வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள தொழில் அமைப்புகள் குறித்து அறிந்து கொள்ள வந்திருப்பதாகவும், தமிழகத்தின் வளர்ச்சியில் ஒடிசா இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சி யின் ஒரு பகுதியாக இங்கு வந்து உரையாடிய தாகக் கூறினார். இரண்டே நிமிடத்தில் இந்த விபரத்தைக் கூறி விட்டு கூடுதலாகப் பேசாமல் தவிர்க்க முயன்றார். இஆர்டி பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய மாற்றம் செய்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். குறிப்பாக 8 ஆம் வகுப்பு சமூக அறி வியல் பாடப்புத்தகத்தில், பாபர், அக்பர், ஔ ரங்கசீப் பற்றி சர்ச்சைக்குரிய முறையில் சித்திரிக் கப்பட்டுள்ளது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கா மல் நழுவிச் சென்றார்.  அவருடன் இருந்த அண்ணாமலை, அமைச்சர் தர்மேந்திர பிரதான், இங்கு சம்பல் பூர் எம்.பி.,யாக மட்டுமே வந்துஉள்ளார். பிறகு கேட்டுக் கொள்ளலாம் என சொல்லி அவ ரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.  ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை வர வேற்கும் வகையில், ஒடியா மொழியில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க ஒன்றிய பாஜக அரசு வெறித்தனமாக முயற்சிக் கிறது. ஆனால் அந்த பாஜக அரசின் அமைச்ச ரான தர்மேந்திர பிரதான் வருகைக்கு மட்டும் அவரது தாய் மொழியான ஒடியா மொழியில் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. இது,  பாஜகவின் மொழிக் கொள்கையை அம்பலப் படுத்துவதாக இருந்தது. தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளுக்கான பணத்தை தராமல் ஒன்றிய அரசு முடக்கி  வைத்துள்ளது. லட்சக்கணக்கான குழந்தை களின் கல்வியை பாழாக்கி உள்ளது. இந்நிலை யில், கோவை நீலாம்பூர் எல் அண்ட் டி பை பாஸ் வழியில் வந்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்பு தெரி வித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்பகம் கல்லூரி  எதிரில் இவ்வமைப்பின் தலைவர் வே.ஈஸ்வரன்  தலைமையில் போராடிய அனைவரையும், போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.