ஜவுளிப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல்
சென்னை, ஜூலை 1- விருதுநகரில் ரூ.1,894 கோடி மதிப்பில் ஜவுளிப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்குடன் தமிழ்நாடு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். 1,052 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த ஜவுளிப் பூங்கா மூலம் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்ட மிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்படும் என்றும், 13 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணிகள் நடைபெறும் என்றும், 2026 செப்டம்பருக்குள் கட்டு மான பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் படுக்கைகள் வசதி கொண்ட விடுதியும் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.