tamilnadu

img

போளூரில் பழங்குடியினர்  நலத் திட்ட சிறப்பு முகாம்

போளூரில் பழங்குடியினர்  நலத் திட்ட சிறப்பு முகாம்

திருவண்ணாமலை, ஜூலை 1- திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பழங்குடி யினருக்கான தொல்குடி திட்ட சிறப்பு முகாம் நடை பெற்றது. கஸ்தம்பாடி ஊராட்சியில் உள்ள சங்கரய்யா நகர் பழங்குடி மக்களுக்கு அடிப்படை தேவையான குடி மனை பட்டா, வீடு, ரேசன் கார்டு, ஆதார், கறவை மாடு ஆகியவை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் தனி வட்டாட்சியர் சுமதியிடம் அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இரா.இரவிதாசன், மாவட்ட குழு உறுப்பி னர் இரா.சிவாஜி, கொத்தடிமை மீட்பு குழு தலைவர் ப.ரவி மற்றும் வட்டக் குழு உறுப்பினர் ரவிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.