மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு டிஆர்இயு கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை, ஜூலை 19 - மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு டிஆர்இயு தொழிற்சங்கம் (சிஐடியு) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஆர்இயு மயிலாடுதுறை கிளை சார்பில் சங்கத்தின் திருச்சி கோட்ட துணைச் செயலா ளர் வேந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கிளைத் தலைவர் ஜவகர் வரவேற்றார். கோட்ட செயலாளர் கரிகாலன், உதவி கோட்ட தலைவர் பலராமன், உதவி கோட்ட செயலாளர் அழகிரி, உதவி கோட்ட செயலாளர் ரஜினி, சந்திரோதயம், சிஐடியு மூத்த தலைவர் ராமானுஜம், ஏஜிஎஸ் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிளைச் செய லாளர் மூர்த்தி நன்றி கூறினார். திருச்சி கோட்ட பொறியியல் பிரிவில் எல்.சி. கேட்டுகளில் 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும். தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, நாற்காலி, கேட் மேன்களுக்கு ஓய்வறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நான்-இண்டர் லாக்கிங் கேட்டுகளில் உடனடியாக இண்டர்லாக் வசதி செய்து தர வேண்டும். சமூக விரோதி களால் தாக்குதலுக்கு உள்ளாகும் கேட்மேன் கள், அதிலிருந்து விடுபட சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மயிலாடுதுறை பொறியியல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு திரும்பிய தொழிற்சங்க பொறுப்பா ளர்கள் மீது, விசாரணை இன்றி பொய் வழக்குப் பதிந்த மயிலாடுதுறை காவல் துறையை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக் கிளைகளில் இருந்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.