அரகநாட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் ஜூலியட் துவக்கி வைத்தார்
அருமனை, அக்.9- கன்னியாகுமரி மாவட்டம் கடையாலு மூடுபேரூராட்சி களியல் - நெட்டாசாலை யில் பல ஆண்டுகளாக மழை நீர் ஓடை இல்லாமல் சாலை அரிப்பு ஏற்பட்ட நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிதியிலிருந்து ரூ 7.50 லட்சம் செலவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஜூலியட் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான எஸ். ஆர். சேகர், கவுன்சிலர் ஜாண் ,வட்டாரக் குழு உறுப்பினர் லைலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கியதால் அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை பாராட்டினர்.
