tamilnadu

img

பண்ணை அடிமையாக இருந்து கட்சித் தலைவராக உயர்ந்தவர் திருமயம் ஜீவானந்தம் - ஜி.ராமகிருஷ்ணன் பெருமிதம்

பண்ணை அடிமையாக இருந்து கட்சித் தலைவராக உயர்ந்தவர் திருமயம் ஜீவானந்தம்

புதுக்கோட்டை, ஆக. 19 - சிறிய வயதில் பண்ணை அடிமை யாக இருந்து தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில், முன்னணித் தலைவ ராக உயர்ந்தவர் திருமயம் சி.ஜீவானந்தம் என கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர், சிஐடியு நிர்வாகி என பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர் தோழர் சி.ஜீவா னந்தம். 70 வயதைக் கடந்து வாழும் ஜீவானந்தம் தற்பொழுதும் கட்சிப்பணி களில் தீவிரமாகப் பணியாற்றி வரு கிறார். அவரது வாழ்க்கை குறித்து எஸ்.கவிவர்மன் எழுதிய “நம்ம தோழர் திருமயம் ஜீவா” என்ற நூல் வெளி யீட்டு விழா திங்கள்கிழமை புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், நூலை வெளியிட்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “தோழர் ஜீவானந்தம் பேசும்போது எனது புத்தக வெளியீட்டுக்கெல்லாம் தலைவர்கள் வருவார்களா என்ற தயக்கம் இருந்தது என்றார். நான் நெய்வேலியில் பணியாற்றிய போது, அங்கே ஒரு சேர்மன் இருந்தார். தொழி லாளர்களுக்கு ஆதரவாக இருப்பார். அவர் தனது ஓய்வுபெறும் நாளுக்கு மறு நாள் சுரங்கத்திற்கு வந்து தொழி லாளர்களை சந்தித்தார். தொழி லாளர்களிடம் இங்கே எனக்கு என்ன வேலை என்றார். தொழிலாளர்கள் நீங்க ள்தான் எங்கள் சேர்மன் என்றனர். இல்லை அது அரசு எனக்கு வழங்கிய பதவி. எனது வேலை உங்களை நன்றாகப் பாதுகாப்பதுதான் என்றார். முதல் பெண் இடைக்கமிட்டிச் செயலாளர்  அதே போல கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கட்சித் தோழர்களின் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதும் ஒரு  கடமைதான். தோழர் ஜீவானந்தம் ரயில்வேயில், மின்சார வாரியத்தில் பணியாற்றிய போது தொழிலாளர் களின் நலனே முக்கியம் என்ற  கொள்கைப் பிடிப்போடு அர்ப்பணிப்பு டன் பணியாற்றியுள்ளார். தான் மட்டு மல்லாது தனது மனைவி, மகன், மகள், மருமகள், மருமகன், பேரன், பேத்தி என குடும்ப வாரிசுகள் அத்தனை பேரை யும் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினர் களாக்கிய பெருமை ஜீவானந்தத்தை சாரும். அவருடைய மகள் வைகை ராணி புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பெண் இடைக்கமிட்டிச் செய லாளர் என்ற பெருமையோடு சிறப்பாக பணியாற்றி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் பண்ணை  அடிமையாக இருந்த பி.எஸ். தனுஷ் கோடியின் குடும்பம் எந்த ஊரில் பண்ணை அடிமை தொழில் செய்ததோ அதே ஊரில் ஊராட்சி மன்றத் தலைவ ராக, ஒன்றியப் பெருந்தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்த பொறுப்புகளுக்கு வளர்த்தெடுத்த இயக்கம் செங்கொடி இயக்கம்.  அதே போலத்தான் சிறிய வயதில் பண்ணை அடிமையாக இருந்த தோழர்  ஜீவானந்தம் செங்கொடி இயக்கத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட உயர்ந்த பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டார். ஒரு கம்யூனிஸ்ட் மக்களோடு நெருங்கிய தொடர்பு உள்ள வனாக இருக்க வேண்டும். அர்ப்பணிப் போடு பணியாற்ற வேண்டும். கட்சி  நலனே பிரதானமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட கொள்கைப் பிடிப்போடு பணியாற்றிவரும் தோழர் ஜீவானந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறினார். நூல் வெளியீட்டு விழாவிற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். நூலின் முதல் பிரதி யைப் பெற்றுக்கொண்டு மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., வாழ்த்திப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, நூலாசிரியர் எஸ்.கவிவர்மன், சி.ஜீவானந்தம் ஆகி யோரும் உரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், சு.மதி யழகன், டி.சலோமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.