திமுகவுக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை!
முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஆக. 28- அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளி வீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை என்றும், அவற்றை மக்கள் புறந் தள்ளுவார்கள் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 2023-24 அறிக்கையின்படி தொழில்துறை வேலைவாய்ப்பு களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக ஒன்றிய அரசின் அறிக்கை ஒன்று வெளியாகி யுள்ளது. இதனைக் குறிப்பிட்டு தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “இந்தியாவில் தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மாநி லம் மட்டுமின்றி வேலைவாய்ப்பு களிலும் முதலிடத்தில் (15.24%) இருக்கிறது. தமிழகத்தில்தான் தொழிற்சாலைகளும் (40,100) அதிகமாக இருக்கின்றன” என்று தெரிவித்திருந்தார். இதனை, தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், கருத்து ஒன்றை யும் பதிவிட்டுள்ளார். “இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் மையமாக தமிழ்நாடு உள்ளது! அமித் ஷா முதல் பழனிசாமி வரை திமுக ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பாஜக அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ! சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சா ரம், போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங் களால் இந்தச் சாதனை சாத்திய மாகியிருக்கிறது! திமுக ஆட்சி யின் சாதனைச் சரித்திரம் தொட ரும்! அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளி வீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.
