tamilnadu

img

வாள் வீச்சு வீரத்தின் பாரம்பரியமும் சாதனையும்

வாள் வீச்சு வீரத்தின் பாரம்பரியமும் சாதனையும்

வாளின் மகத்துவம், இன்று தமிழ்நாட்டின் வாள்வீச்சு வீரர்களின் கைகளில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் காலம் முதல் ஒலிம்பிக் அரங்கின் பெருமை வரை, தமிழர்களின் வாள் ஏந்திய கைகள் காலத்தால் அழியா புகழ் பாடியுள்ளனர்.  வீரத்தின் வேரூன்றிய வரலாறு தமிழ்நாட்டில் வாள் வீச்சின் வரலாறு நூற்றாண்டுகள் பழமையானது. சிலம் பாட்டம், வாள் சிலம்பம், கத்தி சிலம்பம் என்னும் நம் பாரம்பரிய தற்காப்புக் கலை கள் இன்றைய நவீன வாள்வீச்சுக்கு உறுதியான அடித்தளமாக நிற்கின்றன. குறிஞ்சி மன்னனின் வீர வாளிலிருந்து மைசூர் திப்புவின் வீரத்தின் வெளிப்பாடு வரை, தமிழர்களின் கைகளில் வாள் என்பது வெறும் ஆயுதம் மட்டுமல்ல, அது  கலையும்கூட. இன்று நமது வாள்வீச்சு வீரர்களின் திறமைக்கு ஆழமான பின்புல மாக அமைந்துள்ளன. “வீரம் விளைந்த மண்ணில் விளைந்த விளையாட்டு” எனலாம் இந்த வாள்வீச்சை. தமிழகத்தின் பொன் மைல்கல்கள்  சென்னையை சேர்ந்த ச.ஆ. பவானி  தேவி என்ற பெயர் தமிழ்நாட்டின் விளை யாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக் களால் பொறிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள் வீச்சு வீராங்கனை என்ற பெருமை அவரைச் சேர்ந்தது.  ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலத்தை வென்ற அவர், காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று தமிழகத்தின் வீர மரபை உலகறியச் செய்தார். பவானி தேவியின் வெற்றி தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, அது தமிழக வீராங்கனை களுக்கான புதிய பாதையை வகுத்தது.  சேலம் மண்ணின் மைந்தி  கனகலட்சுமி, இந்தப் பெருமையின் தொடர்ச்சியாக நிற்கிறார். கடந்த வாரம்  பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், இறுதிப் போட்டியில் குரோஷியா நாட்டு வீரர் பிளாசிக் டோஜ்ராவுடன் நடத்திய கம்பீர மான போராட்டம் அனைவரின் பாராட்டை யும் பெற்றது. தொடர் முழுவதும் அவரது வேகம், துல்லியம் மற்றும் வியூகங்கள் தமிழகத்தின் வாள்வீச்சு மரபின் நவீன வெளிப்பாடாக திகழ்ந்தன.  இதே தொடரில், சோனியா தேவி போன்ற வளர்ந்து வரும் திறமைகள், தமிழகத்தில் வாள்வீச்சு எனும் விளை யாட்டு எவ்வளவு ஆழமாக வேரூன்றி யுள்ளது என்பதைக் காட்டுகின்றன. சர்வதேச சாட்டிலைட் வாள்வீச்சு போட்டி ஒன்றில் கனகலட்சுமி வெண்கலம் வென்றார். இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் என்பது நமது விளையாட்டு வளர்ச்சியின் சிறப்பான அடையாளமாகும்.  நவீன கால வளர்ச்சியும் சவால்களும்  இன்று தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வாள்வீச்சு பயிற்சி மையங்கள் வேகமாக வளர்ந்து வருகின் றன. சென்னை முதல் சேலம் வரை, கோயம்புத்தூர் முதல் மதுரை வரை, வாள்வீச்சு காண ஆர்வம் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு வாள்வீச்சு சங்கம் மாநிலம் முழு வதும் இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் பணியில் தன்னை அர்ப்ப ணித்துள்ளது. ஆனால் விலையுயர்ந்த கருவிகள், தகுதிவாய்ந்த பயிற்சி யாளர்களின் பற்றாக்குறை, சர்வதேச போட்டிகளுக்கான அதிக செலவு போன்ற சவால்களும் உள்ளன. இவற்றை சமாளிக்க அரசின் ஆதரவும் சமுதாய ஒத்துழைப்பும் அவசியமாகிறது.  எதிர்காலம்  பவானி தேவி மற்றும் கனக லட்சுமி யின் வெற்றிகள், தமிழ்நாட்டில் பெண்  விளையாட்டு வீரர்களுக்கான அணுகு முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்று பல குடும்பங் கள் தங்கள் பெண் குழந்தைகளை வாள்வீச்சு பயிற்சிக்கு அனுப்ப முன் வரு கின்றன. வாள்வீச்சு மையங்கள் கிராமப் புறங்களில் அமைக்கப்படுவதால், அங்குள்ள இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன.  நவீன வாள் வீச்சின் வழியே தமிழர்களின் பாரம்பரிய வீர கலாச் சாரம் புதிய தலைமுறையினருக்கு எடுத்து ரைக்கப்படுகிறது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் நோக்கிய பயணத்தில் தமிழக வாள்வீச்சு வீரர்கள் கடுமையான பயிற்சி யில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் சர்வதேச தரத்திலான வாள்வீச்சு மையம் அமைப்பது, மாவட்ட அளவிலான பயிற்சி  மையங்கள் தொடங்குவது போன்ற திட்டங்கள் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.  பவானி தேவியின் ஒலிம்பிக் கனவு முதல் கனக லட்சுமியின் சர்வதேச வெற்றி  வரை, தமிழ்நாட்டின் வாள்வீச்சு வரலாறு பொன்னெழுத்துக்களால் எழுதப் பட்டுக் கொண்டிருக்கிறது. பவானி தேவி, கனகலட்சுமி போன்ற வீராங்கனை களின் இந்த வெற்றிகள்  வெறும் சாதனைகள் மட்டுமல்ல, தமிழகத்தின் பெருமைகள்.  வளர்ந்து வரும் விளை யாட்டு கலாச்சாரத்தின், பெண் அதி காரத்தின், இளைஞர் ஆற்றலின் அடை யாளங்களாகும். பாரம்பரிய வீர விளை யாட்டுகளின் நவீன வடிவமான வாள் வீச்சில், தமிழ்நாடு இன்று தேசிய அள விலும் சர்வதேச அளவிலும் தனது முத்தி ரையை பதித்து உள்ளது. எதிர்கா லத்தில் இன்னும் பல கனகலட்சுமிகள், பவானி தேவிகள் தமிழ் மண்ணில் இருந்து உதயமாகி, உலக அரங்கில் தமிழ்நாட்டின் வீர மரபை நிலைநாட்டுவர் என்பதில் ஐயமில்லை.