tamilnadu

img

வாக்காளர் பட்டியல் மாற்றத்தால் தமிழக மக்களின் உரிமை பாதிக்கும்!

வாக்காளர் பட்டியல் மாற்றத்தால்  தமிழக மக்களின் உரிமை பாதிக்கும்!

ப. சிதம்பரம் எச்சரிக்கை

சென்னை, ஆக. 3 - தமிழக வாக்காளர் பட்டியலில் சுமார் 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைச் சேர்த்து, தேர்தல் முறைகளை மாற்ற தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேலும் மேலும்  வினோதமாகி வருவதாக ப. சிதம்பரம் கூறியுள்ளார். பீகாரில் 65 லட்சம் வாக்கா ளர்கள் தங்களுடைய வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை  புதிய வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தா னது என்றும் சட்டவிரோதமானது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ‘நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்’ என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும் என ப. சிதம்பரம் கூறியுள்ளார். மேலும் தாங்கள் விரும்பும் ஆட்சியை தேர்வு செய்யும் தமிழக வாக்காளர்களின் உரிமை யில் அவர்கள் தலையிடுவது போன்றதாகும் என அவர் எச்சரித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்க மாக செய்தது போலவே, பீகார் அல்லது அவர்களின் சொந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் ஏன் வாக்களிக்கக் கூடாது என்றும், சத் பூஜை விழாவின்போது அவர்கள்  பீகாருக்குச் சென்று வரத்தானே செய்கிறார்கள் என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பீகாரில் அல்லது அவரின் சொந்த மாநிலத்தில் வீடு உள்ள நிலையில் அவர்களை தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கேட்டுள்ளார். தேர்தல் ஆணையம் தனது அதிகாரங் களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங் களின் தேர்தல் தன்மை மற்றும் முறை களை மாற்ற முயற்சிக்கிறதுஎன்றும் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.