tamilnadu

img

தவெக தலைவரின் தாமதமே கரூர் துயரத்திற்கு முக்கிய காரணம்

தவெக தலைவரின் தாமதமே கரூர் துயரத்திற்கு முக்கிய காரணம்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

சென்னை, அக். 15 - கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனதை யும் உலுக்கியதாகவும், இந்த துயரச் சம்பவத்திற்கு, தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே முக்கியக் காரணம் என்றும் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்றத்தில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் செவ் வாய்க்கிழமை (அக்.14) தொடங்கி யது. முதல்நாளில் சட்டமன்ற உறுப்பினர் அமல் கந்தசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து, புதன் கிழமை (அக்.15) காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேள்வி நேரம் நடைபெற்றது.  அதன் பின்னர், தவெக தலை வர் விஜய்-யின் கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேசுவதற்கு, வழக்கமான அவை நடவடிக்கை களை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்ன தாக, இந்த விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதிக்கக் கோரி திமுக தோழ மைக் கட்சிகளும் பேரவைத் தலை வரிடம் அனுமதி கேட்டிருந்தன. 

இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் விரிவான விளக்கமளித் தார்.  உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் “கரூர் மாவட்டத்தில் நடந்த துயரச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்  கும் உள்ளாக்கியது. இறந்தவர் களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியை யும், உறவுகளை இழந்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். கரூர், வேலுச்சாமிபுரத்தில் செப். 27 அன்று தவெக அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி அளிக்கப்படவில்லை. 11 நிபந்தனைகளுடன் கூட்டத்திற்கு அனுமதி செப்டம்பர் 25-இல் லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை  பகுதியில் அனுமதி கோரிய போதும், பாதுகாப்பு காரணங் களால் அனுமதி வழங்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து, வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நடத்த கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மனு அளித்தார். அவரின் மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளு டன் அனுமதி வழங்கப்பட்டது. கரூர் நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறையின் சார்பாக, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலை மையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18  ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வா ளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 517 காவல் அதிகாரிகள் கரூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி, வெளிமாவட்  டங்களிலிருந்து ஒரு காவல் கண் காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதி விரைவுப் படை காவலர்கள் என 91  பேர் வரவழைக்கப்பட்டனர். அன்றைய நாளில் பாதுகாப்புப் பணிக் காக அதிகாரிகள், காவல்துறை யினர் என மொத்தம் 606 பேர் ஈடு படுத்தப்பட்டனர். வழக்கமாக, அரசியல் கூட்டங் களுக்கு அளிக்கப்படும் காவல்துறை பாதுகாப்பைவிட அதிகளவில்தான் வழங்கப்பட்டிருந்தது. 10,000 பேர் வருவார்கள் என்று தெரி விக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கும் அதிகமானோர்தான் வரு வர் என்று கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டம்  நடத்த அனுமதி கோரிய அனு மதிக் கடிதத்தில், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி என்று குறிப்பிட் டிருந்தனர். ஆனால், செய்தியாளர் சந்திப்பு, சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு அக்கட்சித் தலை வர் வருவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந் தார். இதனால், கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கி விட்டனர்.  27.09.2025 அன்று, அக்கட்சியின் தலைவர் சென்னையிலிருந்து காலை 08.40 மணிக்கு புறப்பட்டு,  09.25 மணிக்கு திருச்சி வந்தடைந் தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு,  கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்து உள்ளார். அதாவது 7 மணி நேர தாமத மாக வந்தடைந்தார். இந்தத் தாம தம், கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சில முக்கிய ஏற்பாடுகளை கூட்ட  ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும்.  கரூரில் அவை செய்யப்பட வில்லை. காலைமுதல் காத்திருந்த  மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை,  உணவு வழங்க எந்தவித ஏற்பாடு களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபா தையைக் கழிக்க, பெண்களால் வெளியில் செல்ல இயலவில்லை. அதே வேலுச்சாமிபுரத்தில், சம்ப வத்துக்கு 2 நாட்கள் முன்னதாக (செப். 25) எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்ட பரப்புரைக் கூட்டத் தில் முறையாக ஒருங்கிணைக்கப் பட்டு, கட்டுப்பாட்டுடன் நடந்து  கொண்டனர்; எந்தவித அசம்பாவித மும் இல்லாமல் நடந்து முடிந்தது.  அதில் சுமார் 12,000 முதல் 15,000  பேர் பங்கேற்றனர்.

அந்தப் பரப்பு ரைக்கு சுமார் 137 காவலர்கள், 30  ஊர்க்காவல் படையினரும் பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தக் கட்சியின் கூட்டம் நடை பெற்றுள்ளது.  கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப் பாளையம் சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாக னம் திருக்காம்புலியூர் ரவுண்டா னாவை அடைந்து கோயம்புத்தூர் சாலையை நோக்கி வலது பக்கத்தில்  தவறான பாதையில் சென்றது. அப்போது காவல் துறையின் அறி விப்பை மீறி கேரவன் வாகனம் முனி யப்பன் கோவில் அருகில் தவறான திசையில் வலதுபுறம் கடந்தது. அந்த வாகனத்தைத் தொ டர்ந்து பெருவாரியான ரசிகர் களும், கட்சியினரும் கேரவன் வாக னத்தை பின்தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரச்சார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், அக்‌ஷயா மருத்துவமனை அருகே  வாகனத்தை நிறுத்தி உரையாற்று மாறு பிரச்சார வாகனத்தில் இருந்த வர்களை கரூர் மாவட்ட உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அறி வுறுத்தியுள்ளார். ஆனால், முன்பே  அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் என்று பிடிவாதத்துடன், தொடர்ந்து முன்னேறிச் சென்று உள்ளனர்.

காவல்துறையினரின் வழிமுறை களை மீறி, அக்‌ஷயா மருத்துவமனை யிலிருந்து 30 முதல் 35 மீட்டர்  தொலைவில் வாகனம் சென்ற போது, இருபுறமும் இருந்த கூட்டத்தை  நிலைகுலையச் செய்தது. கூட்டத் தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில், மூச்சுத் திணறல், மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டனர். கூட்டத்தின் ஒருபகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து,  தகரக் கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சி செய்தனர். இத னால் மின்சாரம் தாக்குவதைத் தடுக்க, ஜெனரேட்டர் ஆப ரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்திருக் கிறார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில்  கூட்ட நெரிசலால் காயமடைந்தும் சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து  காவல் துறையினர் மருத்துவ மனைக்கு ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்தனர். காவல் துறை, தீயணைப்பு மற்றும்  மீட்புத் துறையினர் மற்றும் ஆம்பு லன்ஸ் மீட்புக் குழுவினர் காயமடைந் தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கரூரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த  உடனேயே, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், முதன்மைச் செயலர், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் உள்ளிட் டோர் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டனர். மேலும், அன்று இரவே நானும் கரூருக்குச்சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறு தல் கூறினேன். இதைக் கேள்விப் பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் தான் உடனடியாக கரூருக்கு அன்றைய இரவே சென்றேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் பார்வையிட்டு, மருத்துவர்களுடன் ஆலோசித்து உத்தரவுகள் பிறப் பித்தேன். அரசின் அனைத்து துறை களும் ஒருங்கிணைந்து செயல் பட்டன. அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினார்கள். தமிழ்நாடு அரசு இந்தச் சம்ப வத்தை சட்டப்படி, விரைந்து கை யாண்டது. அனுமதி வழங்கல், மருத்துவ உதவி, நிவாரண விநியோ கம் அனைத்தும் சரியான நடை முறையில் நடந்தன. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது போன்ற துயர சம்பவம்  இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக் கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கி யம். மக்களின் உயிரே விலைமதிப் பற்றது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”  இவ்வாறு முதலமைச்சர் குறிப் பிட்டார்.