பக்தியின் பெயரால் பகல் வேஷம் போடுவோரின் வன்மம் எங்களை ஒன்றும் செய்யாது!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஜூலை 2 - இந்து சமய அறநிலையத்துறை செலவில், சென்னை கபாலீசுவரர் கோயிலில் 32 இணையர்களுக்கு புத னன்று (ஜூலை 2) திருமணம் நடை பெற்றது. இந்த திருமணத்தை நடத்தி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மண மக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது, இந்து சமய அறநிலை யத்துறை செயலாளர் சேகர்பாபுவின் அயராத சேவையைப் பாராட்டிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 2,376 திருமணங்கள், அறநிலையத் துறை செலவில் நடத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதில் 150 திருமணங்களை, தானே தலைமையேற்று நடத்தி வைத்ததாகவும் குறிப்பிட்டார். அறநிலையத்துறையின் சாதனை களை விவரித்த முதலமைச்சர், 3,177 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டதாகவும், 997 கோயில் களுக்கு சொந்தமான 7,655.75 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டதாகவும், 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான 26,000 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக வும் தெரிவித்தார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சக ராகும் திட்டத்தின் கீழ் 29 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், 295 திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி னார். ஒரு வாரப்பத்திரிகையில் தன்னை கேலி செய்யும் கார்ட்டூன் வெளியா னதை குறிப்பிட்ட முதலமைச்சர், “நான் காவடி எடுப்பது போன்றும், அமைச்சர் கள் எல்லாம் அலகு குத்தி கொள்வது, தரையில் உருளுவது போன்றும் கார்ட்டூன் பத்திரிகை ஒன்றில் வெளி வந்துள்ளது. இதனை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. இது பல ஆண்டு கால வன்மத்தை வெளிப் படுத்துகிறது” என்றார். “பக்தி என்ற பெயரில் பகல்வே ஷம் போடுபவர்களால் அரசின் ஆன்மீக சேவையைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. ஆனால் உண்மையான பக்தர் கள் எங்கள் பணியைப் பாராட்டு கிறார்கள்” என்றார். “வன்மம் கொண்டவர்களின் ஆதர வற்ற அவதூறுகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. இவையெல் லாம் எங்களுக்கு ஊக்கமும் உற்சாக மும் தருகின்றன. திருநாவுக்கரசரின் வார்த்தைகளின்படி ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற உணர்வோடு மணமக்களை வாழ்த்துகிறேன். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் அதுதான் என் னுடைய அன்பான வேண்டுகோள்” என்றார்.