குண்டும் குழியுமன சாலை: வாழை நட்டு சிபிஎம் போராட்டம்
தேனி, அக்.11- கம்பம் ஆங்கூர்பாளையம் சாலை யில் உள்ள பள்ளத்தில் வாழை கன்று நடவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் போராட் டத்தில் ஈடுபட்டனர். கம்பத்தில் இருந்து ஆங்கூர் பாளையம் செல்லும் சாலையை சாமாண்டிபுரம், குள்ளப்பகவுண்டன் பட்டி, மஞ்சள்குளம், கக்கன் காலனி யில் வசிக்கும் பொதுமக்கள் மட்டு மின்றி இப்பகுதியில் உள்ள பள்ளி களுக்கு செல்லும் மாணவ, மாணவி யர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக் கிளில் அதிகம் சென்று வருகின்றனர். இந்நிலையில் மஞ்சள்குளம் சாலை சந்திப்பு அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இத னால் சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகு தியில் தொடர் விபத்துகள் ஏற்படுகின் றன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 6 மாதங்களாக கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடு த்து வருகின்றனர். ஆனால் எந்த நட வடிக்கையும் இல்லை. இந்நிலையில் வியாழனன்று மோட்டார் சைக்களில் சென்ற கர்ப்பிணி பெண் தடுமாறி கீழே விழுந்தார். மேலும் பள்ளி மாணவர்கள் சிலர் கீழே விழுந்த னர். தொடர் விபத்தின் எதிரொலியாக சாலையில் உள்ள பள்ளத்தை சீர மைக்காத ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கம்பம் நகரக் குழு சார் பில் சாலையில் மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் வாழை நடும் போரட்டம் நடத்தப்பட்டது. நகரச் செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், நகரக் குழு உறுப்பி னர்கள் விஜயகுமார், மணிகண்டன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். 2 மணி நேரம் போராட்டம் நடத்தியும் அதிகாரி கள் சம்பவ இடத்திற்கு வராததால் சுடு காட்டில் தஞ்சம் புகும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் மக்கத்தம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சாலை ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்கு உட்பட் டது. அதேசமயம் சாக்கடை கால்வாய் கம்பம் நகராட்சிக்கு உட்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையான சாக்கடை வசதி அமைக்கப்படாததால் கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து சாலை யை சேதப்படுத்துகின்றன என்றார். அப்போது போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் சாக்கடை கால்வாய் அமைப் பது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்துவோம், தற்போதைய சூழ் நிலையில் போர்க்கால அடிப்படையில் சாலையில் உள்ள பள்ளத்தை சீர மைக்க என்ன நடவடிக்கை உள்ளது என்ற னர். அப்போது வட்டார வளர்ச்சி அலு வலர் தற்காலிகமாக பள்ளத்தில் மண் மேவி சரி செய்யப்படும். ஒரு மாத கால அவகாசம் கொடுத்தால் சாலையை முழு மையாக சீரமைக்கப்படும் என்றார்.
