எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: இறுதி விசாரணைக்கு தேதி நிர்ணயம்
சென்னை, செப்.20 - டெண்டர் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்ச ரும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.பி வேலுமணி பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. இவரது பதவி காலத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு முறை கேடாக ஒப்பந்தங்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கியதில் சுமார் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்ட தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந் தது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவுக்கு பதிலளித்து, அறப்போர் இயக்கம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரிய தால், வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.