tamilnadu

img

300 ஆண்டுகால மாநகராட்சி வரலாற்றில் முழு பதவிக்காலத்தை கடக்கும் பெண் மேயர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி பெருமிதம்

300 ஆண்டுகால மாநகராட்சி வரலாற்றில்  முழு பதவிக்காலத்தை கடக்கும் பெண் மேயர்  தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி பெருமிதம்

சென்னை, அக்.15 - சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறை யாக ஒரு பெண் மேயர் தனது பதவிக்காலத்தை முழுமை யாக நிறைவு செய்ய உள்ளார்  என்று தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கூறினார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) பெண்கள் பிரிவு சென்னையில் புதன்கிழமை (அக்.15) ஏற்பாடு செய்திருந்த பெண்கள் முன் னேற்றம், கல்வி மற்றும் வாழ்வாதாரம் குறித்த “Voice of the People” நிகழ்வில் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.    அவர் மேலும் பேசுகை யில், தமிழ்நாடு முற்போக் கான மாநிலம். சுயமரியாதை இயக்கம் நடந்த மாநிலம். பெண்களுக்கு கல்வியும் வேலையும் இப்போது கிடைக்கிறது என்றால், நீண்ட நெடிய போராட்ட வர லாறு அதற்குப் பின்னால் உள்ளது. முற்போக்கான, பன்முகத் தன்மை கொண்ட அரசு மாநிலத்தில் அமை யும்போதுதான் பெண்க ளுக்கு அதிகாரம் கிடைக் கிறது. தமிழகத்தில் அரசிய லிலும், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களிலும் பெண்கள் பங்கேற்பு  அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 50 விழுக்காடு பெண் கவுன் சிலர்கள் உள்ளனர். இரண்டு பெண்கள் நிலைக்குழுத் தலைவர்களாக உள்ளனர். ஒருவர் மண்டலக் குழுத் தலைவராகவும் இருக்கிறார். சென்னை மாநகராட்சி யின் வரலாற்றில் 300 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பெண்கள் மேயராக இருந்திருக்கிறார்கள். 1957-ல் தாரா செழியன் முதல் பெண் மேயராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். இருப்பி னும் அவர் ஓர் ஆண்டு மட்டுமே மேயராக இருக்க முடிந்தது. இரண்டாவதாக 1971-ல் ஓர் ஆண்டு காமாட்சி  ஜெயராமன் மேயராக இருந்தார். முதல்முறையாக இப்போதுதான் ஒரு பெண் மேயர் தனது பதவிக்கா லத்தை முழுமையாக நிறைவு செய்ய உள்ளார். இதுதான் 300 ஆண்டுகால மாநகராட்சியின் வரலாறு. கலைஞர் முதல்வராக இருந்தபோது பெண்க ளுக்கு வேலைவாய்ப்பு களில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தார். தற்போது அது 40 விழுக் காடாக உயர்த்தப்பட் டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்க ளுக்கான இடஒதுக்கீடு 50 விழுக்காடாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறை வேற்றப்பட்ட போதிலும், இடஒதுக்கீடு இன்னும் வழங்கப்படவில்லை. இது  கடும் சவால். இதை நிறை வேற்றும் பொறுப்பு ஆட்சி யில் இருப்பவர்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் சமூக அக்கறையும், பெண்க ளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற உண்மை யான உறுதிப்பாடும் இருக்க வேண்டும். தற்போதுள்ள சமூகத்தில் பெண்கள் பல தடைகளைத் தாண்டி பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரு கின்றனர் என்றார் தமிழச்சி தங்கபாண்டியன். நிகழ்ச்சிக்கு ஃபிக்கி பெண்கள் அமைப்பு  சென்னை கிளைத் தலைவர் நியாதி மேத்தா தலைமை தாங்கினார். நேம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு களில் முன்னிலை வகித்த 20 மாணவிகளுக்கு சைக்கிள் கள் வழங்கப்பட்டன. மேலும், வாழ்வாதாரத்திற் கான திறன் என்ற திட்டமும் தொடங்கப்பட்டது.இந்தத் திட்டம் வட சென்னை பகுதிகளில் (தண்டையர்பேட்டை, ராய புரம், மனலி) உள்ள பெண்கள் மற்றும் இளை ஞர்களுக்குத் தையல், டிசைன், துணி மேலாண்மை மற்றும் தொழில் திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது.  ஃபிக்கி பெண்கள் அமைப்பு சார்பில் 40 கோடி செலவில் 17 சிப்காட் தொழிற் பூங்காக்களில் க்ரெஷ் (Crèche) மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது முயற்சி, 3.23 லட்சம் பெண்ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் கல்வி சார்ந்த குழந்தை பராமரிப்பு வசதி களை வழங்குகிறது.