tamilnadu

img

தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்

தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை, ஜூலை 8 -  அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (The Economist Intelligence Unit) ஆய்வைக் குறிப்பிட்டு, இது திராவிட மாடல் நிர்வாகத்தின் வெற்றி என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தொழில் செய்வதற்கு ஏது வான சூழல், தொலைநோக்கு கொண்ட  தலைமை, சிறப்பான அரசு கொள்கை கள் மற்றும் அவற்றின் முறையான அம லாக்கம் ஆகியவை ஒன்று சேர்ந்த திமுக ஆட்சியின் வெற்றி என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச வாகன நிறுவனங்கள் தொடங்கி மின்சார வாகன நிறுவனங்கள் வரை, முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி முன்னணி மின்சாதன நிறுவனங்கள் வரை பல துறைகளைச் சார்ந்த முத லீட்டாளர்கள் தமிழ்நாட்டைத் தங்க ளின் முதலீடுகளுக்குத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வரலாற்றில் முன்னெப் போதும் கிடைத்திராத அளவுக்கு தொடர்ச்சியான சர்வதேச பாராட்டை யும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முத லீடு செய்ய விரும்பும் ஒவ்வொரு முத லீட்டாளருக்கும் இந்த வரைபடம் வழிகாட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.