பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் ரயில் திட்டங்களுக்கான பட்ஜெட்டில் தமிழகம் முழுமுற்றாக புறக்கணிப்பு!
சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் புதுதில்லி, பிப். 3 - பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எண்ணற்ற ரயில் திட்டங்களை, பட்ஜெட்டில் அறிவித்துள்ள ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை மட்டும் முழு முற்றாக புறக்கணித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் சு. வெங்கடேசன் எம்.பி. கூறியிருப்பதாவது: புதிய பாதை, இரட்டைப் பாதை திட்டங்களில் ஒன்றுகூட இல்லை! நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கையில் 2.78 லட்சம் கோடி ரயில்வே முதலீட்டுக்கு ஒதுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக் கையில் இல்லாத வகையில் ரூ. 12000 கோடி திரட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 36 ஆயிரத்து 721 கோடி, புதிய ரயில் பாதை திட்டங்களுக்கும், ரூ. 37 ஆயிரத்து 750 கோடி, இரட்டைப் பாதை திட்டங்களுக்கும், ரயில் வண்டிகளை வாங்குவதற்கு ரூ. 65 ஆயிரம் கோடி யும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 700 கிலோமீட்டர் புதிய ரயில் பாதை திட்டங்களும், 2600 கிலோமீட்டர் இரட்டைப் பாதை திட்டங்களும் முடிக்கப்பட்டதாகவும், வரும் நிதியாண்டில் 500 கிலோமீட்டர் புதிய பாதைத் திட்டங்களும் 2400 கிலோமீட்டர் இரட்டைப் பாதை திட்டங்களும் முடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், ஒரு திட்டம் கூட தமிழகத் திற்கு இல்லை. மோடி - சந்திரபாபு நாயுடுவை இணைக்கும் ரயில் திட்டங்கள் 7 உயர் வேக ரயில் மண்டலம் அமைக்கப்ப டும் என்று நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அவை அனைத் தும் ஹைதராபாத் - தில்லி - வாரணாசியை சுற்றியே வரக்கூடியதாக உள்ளன. அதாவது சந்திரபாபு நாயுடுவையும் பிரதமர் தொகுதியை யும் குறி வைத்து இவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெங்களூருவுக்கும் சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் என்று இரு காரிடார்கள் ஹைதராபாத்தையும் பெங்களூரு வையும் குறிவைத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல தனி சரக்குப் பாதை ஒன்று கிழக்கே தான் குனியையும் மேற்கே சூரத்தையும் இணைத்து அமைக்கப்படுமாம். இந்த இரண்டு திட்டங்களும் சுற்றுச்சூழல் அடிப்படையில் தாக்குப் பிடிக்கும் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்கு வரத்து திட்டங்கள் ஆகும். இதைத் தவிர நிதிநிலை அறிக்கையில் ரயில்வே குறித்து வேறு எதுவும் கிடையாது. பிரதம மந்திரி கதிசக்தியிலும் தமிழகத்திற்கு எதுவும் இல்லை ஆனால், பொருளாதார ஆய்வு அறிக்கையில் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதம மந்திரி கதிசக்தி பொருளாதார ரயில் மண்டலங்கள் என்ற பெயரில் மூன்று மண்டலங்கள் உருவாக்கப்ப டும் என்று கூறப்பட்டுள்ளது. எரிசக்தி தாது பொருள் சிமெண்ட் ஆகியவற்றுக்கான ஒரு மண்ட லம்; துறைமுக இணைப்பு இன்னொரு மண்டலம்; அதிக பயணிகள் போக்குவரத்து உள்ள ரயில் பாதைகள் என்ற மூன்று ரயில் மண்டலங்கள் உருவாக்கப்படுமாம். ரூ. 11.17 லட்சம் கோடியில் 434 திட்டங்கள் பிரதமர் கதிசக்தி திட்டத்தில் உள்ளன என்றும் அவற்றில் 122 திட்டங்கள் 1450 கிலோ மீட்டருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் 198 திட்டங்கள் 1977 கிலோ மீட்டருக்கு அனுமதிப்பது என்பது பல்வேறு கட்டங்களில் உள்ளன என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. இவற்றுள் ஏதாவது தென்னிந்தியாவுக்கும் தமி ழகம் கேரளத்திற்கும் உள்ளதா என்றால் ஒன்றும் கிடையாது. அது மட்டுமல்ல. தனியார் பங்களிப் புடன் 16 ஆயிரத்து 631 கோடி ரூபாயில் 18 திட்டங்கள் முடிவடைந்து விட்டனவாம். 7 திட்டங்கள் 16 ஆயிரத்து 334 கோடியில் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றன என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்த பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்திலும் ஒன்று கூட தமிழகத்திற்கோ கேரளத்திற்கோ கிடை யாது. இதைப்பற்றி எந்தப் பேச்சும் கிடையாது. அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கே! தமிழகத்துக்கு கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயிலைப் புறக்கணித்தது மட்டுமல்ல, பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் வட இந்தியா முழு வதும் அமல்படுத்தப்படும் போது தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்தில் 894 கிலோ மீட்டர் தூரத்துக்கு 24 ஆயிரத்து 634 கோடி ரூபாய் செலவில் 2030-31இல் முடியும் வகையில் வர்தா- புசவால் மூன்றாவது நான்காவது பாதைகள்; குந்தியா- தங்கர்க்கர் நாலாவது பாதை; இட்டார் சி - போபால்- பினா நாலாவது பாதை இவற்றுக்கு பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மாநிலங் களின் 3633 கிராமங்களைத் தாண்டி செல்லும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பக்தியார் பூர்- ராஜ்கீர்- திலையா இரட்டை பாதை திட்டம் 1434 கிராமங்களை கடந்து செல்லும் பீகாருக்கான திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல 3,169 கோடி ரூபாயில் பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகியவற்றை உள் ளடக்கிய பகல்பூர்- தம் கா- ராம்பூர் ஹட் இரட்டைப் பாதை திட்டம் ஆகிய அனைத்தும் நிதிநிலை அறிக்கைக்கு முன்பே அனுமதிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு வெறும் 10 ரூபாய் ஒதுக்கி வஞ்சகம் இதே மோடி அரசு தான், தமிழகத்தின் 10 புதிய பாதை திட்டங்களுக்கும், 3 இட்டைப் பாதை திட்டங்களுக்கும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி யுள்ளது. பிரதம மந்திரி கதி சக்தி தேசிய திட்டத்திலும் ஒரு திட்டத்தை கூட சேர்க்கவில்லை. இது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே 2021- 51 காலகட்டத்தில் 38.5 லட்சம் கோடி செலவு செய்து தேசிய ரயில் திட்டம் அமல்படுத்தப் போவதாக அறிவித்தார்கள். அதனை மூடிவிட்டு இப்போது பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்தை அமல்படுத்துகிறார்கள். இந்த திட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி அமல்படுத்துகிறார்கள். இவர்கள் செய்யும் அநியாயங்களை அறிந்து கொள்ள முடியாத வகையில், ‘பிங்க்’ புத்தகத்தை ஒழித்து விட்டார்கள். தனித்தனியே திட்டங்களை நிதிநிலை அறிக் கைக்கு வெளியே வெளியிட்டு தகவலை மறைத்து பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
