tamilnadu

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூா், ஜூலை 28-  தஞ்சையில், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ரமேஷ் வர வேற்று பேசினார். மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை தாக்கல் செய்து மாநிலப் பொதுச்செயலாளர் மு.சீனி வாசன் பேசினார். மாநில பொருளாளர் டேனியல் ஜெயசிங் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தில், “தி.மு.க அரசு  தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி உடனடியாக புதிய ஓய்வூதி யத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். சத்துணவு பணி யாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதி யம் பெரும் அனைவருக்கும் வரையறு க்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அரசு ஊழியர் சங்க  கொடியை மாநிலத் தலைவர் பாஸ்கர னும், அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளன கொடியை மாநில பொதுச் செயலாளர் சீனிவாசனும் ஏற்றிவைத் தனர். இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மகளிர் துணை குழு உறுப்பினர்கள், தோழமை சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.