tamilnadu

img

இன்று தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கே.இளங்கோ, கே.பாண்டீஸ்வரி போட்டி

இன்று தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கே.இளங்கோ, கே.பாண்டீஸ்வரி போட்டி

சென்னை, மார்ச் 29- தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி பார் கவுன்சில் தேர்தல் இன்று (மார்ச் 30) நடை பெறுகிறது. இத்தேர்தலில் அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவர் கே.இளங்கோ, கே.பாண்டீஸ்வரி உட்பட மொத்தம் 143 வழக்கறிஞர் கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் மார்ச் 27  மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தல் நடைமுறை உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா மற்றும் மூத்த வழக்கறிஞர் இ.ஓம்பிரகாஷ் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் 166  வாக்குச்சாவடி மையங் களும், புதுச்சேரியில் 2  மையங்களுமாக மொத்தம் 168 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. முதன்முறை யாக ‘க்யூஆர் கோடு’ (QR  Code) முறையில் வாக்காளர் களின் விவரங்கள் சரி பார்க்கப்படவுள்ளன. காலை  10 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறும். ஒரு லட்சத்து பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் வாக்களித்து 23  உறுப்பினர்களை நேரடி யாகத் தேர்வு செய்வர்.  மேலும் இருவர் நிய மன உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு மொத்தம் 25 பேர் கொண்ட பார் கவுன்சில் அமைக்கப்படும். ஒவ்வொரு  வழக்கறிஞரும் 23 வாக்கு கள் அளிக்க உரிமை பெறுவர். முதல் வாக்கு, இரண்டாம் வாக்கு என்ற  முன்னுரிமை அடிப்படை யில் வெற்றி தீர்மானிக்கப்படும். களமிறங்கிய வழக்கறிஞர்கள் இத்தேர்தலில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.இளங்கோ (வரிசை எண் 27) போட்டியிடுகிறார். பெண் வழக்கறிஞர்கள் சார்பில் கே.பாண்டீஸ்வரி (வரிசை எண் 72) நிறுத்தப் பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் உள்ள அனைத்து மாவட்ட, தாலுகா நீதி மன்றங்களுக்கும் நேரில் சென்று வழக்கறிஞர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி னர். சங்கத்தின் மாநில, மாவட்ட, தாலுகா நிர்வாகி கள் முழுவீச்சில் களப்பணி யாற்றினர். மண்டல வாரியாக நடை பெற்ற தேர்தல் பிரச்சாரத் தில் இவர்களுக்கு அமோக ஆதரவு கிட்டியது. வெற்றி வாய்ப்பு மூத்த வழக்கறிஞர்கள் தொடங்கி இளம் வழக்கறி ஞர்கள் வரை கே.இளங்கோ மற்றும் கே.பாண்டீஸ்வரி ஆகியோருக்கு முதன்மை யான முதல் இரண்டு வாக்கு களையும் அளிக்கும் வகை யில் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பிரச்சாரப் பணியாற்றியுள்ளனர். இதனால் இவர்கள் இரு வரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர் என்று  வழக்கறி ஞர்கள் பலரும் உற்சாகத்து டன் தெரிவிக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை வாக்குப்பதிவு முடிந்த தும் அந்தந்த மாவட்டங் களில் வாக்குகள் எண்ணப் படும். பதிவான மொத்த வாக்குகள், செல்லுபடி யான வாக்குகள் மற்றும்  வேட்பாளர்கள் பெற்ற முன்னுரிமை வாக்குகள் மாநிலத் தேர்தல் அதிகாரி களுக்கு உடனுக்குடன் அறி விக்கப்படும். அனைத்து மாவட்டங்களின் வாக்கு எண்ணிக்கையும் முடிந்த தும் ஒட்டுமொத்த முடிவுகள் தொகுக்கப்பட்டு வெற்றி  வேட்பாளர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுவர்.