தமிழ்நாட்டில் 3,000 யானைகள் இருப்பதாக ஆய்வு தகவல்
கோயம்புத்தூர், ஆக.22- தமிழ்நாட்டில் மொத்தம் 3 ஆயிரம் காட்டு யானைகள் உள்ளது. கடந்த ஆண்டை விட யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வன உயிரின ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். கோவையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் சார்பில் யானைகள் பாதுகாப்பு, யானை கள் மனித மோதல் தடுப்பு குறித்தான புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் யானைகள் இருப்பு, பாதுகாப்பிற்காக இந்த மையம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆய்வுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்த கத்தை இம்மையத்தின் வன உயிரின ஆராய்ச்சியாளர் நவீன் வெளியிட வனத்துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து பேசிய வனஉயிரின ஆராய்ச்சியாளர் நவீன் கூறுகையில், யானைகளுக்கும், மனிதர்களுக்கும் எவ்வாறு முரண்பாடு ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன். ஒரு வருட கால ஆய்வில் என்னென்ன செய்யப் பட்டுள்ளது என்பது குறித்து இந்த புத்த கத்தில் உள்ளது. இந்த ஆராய்ச்சி 3 வரு டத்திற்கும் தொடரும். ஆய்வுகள் முடி யும் பொழுது இதற்கான தீர்வுகள் கிடைக்கும். யானைகள் எந்த மாதிரி யான சவால்களை எதிர்கொள்கின்றன பொதுமக்களிடம் எந்த அளவு ஒத்து ழைப்பு இருக்கின்றது யானை மனித முரண்பாடுகளை எவ்வாறு களையலாம் என்று ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று வருட ஆய்வுகள் முடிவில் கிடைக்கக் கூடிய புள்ளி விவரங்களை அரசாங்கத் திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தற்பொழுது வரை எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படை யில் தமிழ்நாட்டில் மூன்றாயிரம் யானைகள் உள்ளது. அதில் பாலக் காடு முதல் கிருஷ்ணகிரி வரை 2,000 யானைகள் இருப்பதாகவும், கன்னியா குமரி முதல் ஆனைமலை வரை சுமார் 1000 யானைகள் இருப்பதாகவும் தெரி வித்த அவர், யானைகளின் எண்ணி க்கை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. யானை மனித மோதலை தடுப்பதற்கு பல்வேறு ஆய்வு கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரு கிறது, டிரோன் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள், ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். எந்த காரணத்திற்காகவும் யானை கள் மனிதர்களை தாக்க வேண்டும் என்பதற்காக வனத்திலிருந்து வெளி யேறுவதில்லை என குறிப்பிட்ட அவர், அது தண்ணீருக்காகவும் உணவுக்காக வும் தான் வரும் என தெரிவித்தார். யானை நாம் செய்த தவறுகளால் தான் இறக்கின்றதே தவிர யானை மீது தவறு என்று குறிப்பிட முடியாது என தெரிவித்தார். 10 வருடத்திற்கு முன்பு யானைகள் சென்ற பாதைகள் எல்லாம் தற்பொழுது விவசாயம் குறைந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவ்வாறு நடைபெறும் பொழுது தான் யானைகளுக்கு மன அழுத்தம் உண்டாவதாகவும் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவதாகவும் தெரிவித்தார்.