tamilnadu

வேலைநிறுத்தம்: ஆயிரக்கணக்கில் பங்கேற்ற அரசுத் திட்ட ஊழியர்கள்

வேலைநிறுத்தம்: ஆயிரக்கணக்கில் பங்கேற்ற அரசுத் திட்ட ஊழியர்கள்

சென்னை, ஜூலை 10 - ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் விரோத மற்றும் தொழிற்சங்க விரோதச் சட்டங்களை எதிர்த்து, நாடு  தழுவிய அளவில் புதனன்று மாபெரும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதில், தொழி லாளர்கள், விவசாயிகள் மட்டுமன்றி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்கள் என 25 கோடிப் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் - உதவியாளர்கள், ஆஷா  ஊழியர்கள், மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். அரசுத் திட்ட ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியமாக ரூ. 9000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி 9.07.2025 அன்று தமிழகத்தில் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்கள் மையங்களை மூடிவிட்டு வேலைநிறுத்தம் செய்தனர். மக்க ளை தேடி மருத்துவ திட்ட ஊழி யர்கள் ஆஷா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அவர் களை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வெகுவாகப் பாராட்டினார்.