tamilnadu

img

ஞானமணிநகர் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை

ஞானமணிநகர் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை

சிபிஎம் தலைவர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

சென்னை, அக். 16 - ஞானமணி நகர் குடி யிருப்புகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதிய ளித்துள்ளார். மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலைக்காக அனகாபுத்தூர் கரிகாலன் நகரை அப்புறப்படுத்திய போது  மாற்று குடியிருப்பு கேட்டு சிபிஎம் போராட்டம் நடத்தியது. இதனையடுத்து குடியிருந்த மக்களுக்கு பொழிச்சலூர் தாங்கல் பகுதியில் மனைகளை ஒதுக்கிக் கொடுத்தது. இந்த குடியிருப்புக ளுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி வியாழ னன்று (அக்.16) அமைச்சர் தா.மோ.அன்பரசனை சந்தித்து கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் மனு அளித்து பேசினார். நீர்நிலைகளில் குடி யிருப்போருக்கு இனி பட்டா வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அந்த தீர்ப்புக்கு முன்பாக ஞானமணி நகர் உருவானது. எனவே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளிக்கு பிறகு கணக்கெடுப்பு பணி கள் நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது பல்லாவரம் பகுதிச் செய லாளர் எம்.தாமோதரன், பகுதி குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், ம.சந்திரன், தாங்கல் கிளை செயலாளர் கோபால், தோழர் சங்க ரய்யா குடியிருப்போர் நல சங்க தலைவர் ப.செல்வம், பொருளாளர் எஸ்.சக்திவேல், சிவா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.