tamilnadu

img

அதிநவீன சிகிச்சை மூலம் முதியவருக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை

அதிநவீன சிகிச்சை மூலம் முதியவருக்கு  முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை

தஞ்சாவூர், அக்.16-  திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 59 வயது நபர் கடந்த 5 ஆண்டுகளாக மூட்டு வலியுடன் அவதிப்பட்டு வந்தார். மேலும், அவருக்கு நடந்து செல்லவும், இயல்பான வேலைகள் செய்யவும் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை சுருத்தில் கொண்டு அவர் தனது குடும்பத்தார் உதவியுடன் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்களை அணுகி மருத்துவ ஆலோசனை பெற்ற நிலையில், அவருக்கு இரண்டு மூட்டுகளுக்கும் நவீன முறையில் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். மேலும், அவரது உறவினர்களின் ஒப்புதலோடு எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூத்த மருத்துவரும் துறை தலைவருமான மரு. வி.செந்தில்குமார், எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரான மரு. எம்.கிஷோர்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உயர்தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி இரண்டு மூட்டுகளுக்கும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர்.  இதர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வீடு திரும்பிய அவர், குறுகிய நாட்களிலேயே தனது இயல்பு நிலைக்குத் திரும்பி, யாருடைய உதவியுமின்றி நடக்கவும், அவருடைய வேலைகளை செய்யவும் தொடங்கி விட்டார். அந்த முதியவர், அறுவை சிகிச்சை செய்து தனக்கு வாழ்வளித்த மருத்துவர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.