தூய தெரசா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா
மயிலாடுதுறை, அக். 7- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 9 ஆவது ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரிச் செயலர் அருட்சகோதரி கருணா ஜோஸ்பாத் மற்றும் கல்லூரி முதல்வர் மேஜர் டாக்டர் வி. காமராசன் தரங்கம்பாடி அருள் தந்தை அருளானந்து ஆகியோர் தலைமை வகித்தனர். வணிக மேலாண்மை துறை தலைவர் அ. ஜார்ஜ், ஆண்டின் விரிவான விளையாட்டு அறிக்கையை சமர்ப்பித்து, கல்வியாண்டு முழுவதும் மாணவிகள் படைத்த சாதனைகளை வாசித்தார். நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வகுமார் கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து, சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை புனித லூக்கா அணி கைப்பற்றி கோப்பையை பெற்றது. விழாவில் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
