tamilnadu

அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு!

அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு!

எஸ்.பி. - டி.எஸ்.பி.க்கள் இடம்பெற்றனர்

சென்னை, அக். 4 - கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டநெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு புல னாய்வுக் குழு (SIT) விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐ.ஜி)  அஸ்ரா கார்க் தலைமையி லான இந்த குழுவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் விமலா,  சியாமளா தேவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 2 எஸ்.பி.க்களுடன் ஏடிஎஸ்பி-க்களுக்கும் குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விபத்து நடந்த இடத்திலிருந்து விசாரணையைத் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  முன்னதாக, இந்த வழக்கை விசாரித்து வந்த,  கரூர் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி பிரேமானந்த், வழக்கு ஆவணங்களை அஸ்ரா கார்க் தலைமையி லான சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சனிக்கிழமை மாலைக்குள் ஒப்படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்  இறந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஏடிஎஸ்பி பிரேமானந்த் அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் 2 நாள் முகாமிட்டு விசாரணை நடத்தினார்.  இந்நிலையிலேயே வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சென்னை உயர் நீதிமன்றம் தனியாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.