பர்கூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரி, மார்ச் 31- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சட்ட மன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் தலைமை தாங்கினார். திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சிபிஎம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் களத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றுவது மற்றும் வெற்றி வியூகங்கள் வகுப்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் பர்கூர் வட்டச் செயலாளர் சீனிவாசன், போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் சாமு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பான ஆலோசனைகளை வழங்கினர். கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சாயிகள் பலரும் கூறினர். இது தொடர்பாக முதல மைச்சரிடம் பேசினேன். புதிய கூட்டுறவு சட்டப்படி, ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தால்தான் தள்ளுபடி செய்ய முடியும். எனவே, ஒன்றிய பாஜக அரசு அனு மதி தராவிடில் அத்தகைய வாக்குறுதி கொடுத்து நிறை வேற்ற முடியாமல் போகும் நிலை உள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.
இருப்பினும், ஏதாவது ஒரு வகையில் விவசாயக் கடன், விவசாயக் கடன் வட்டி தள்ளுபடி என்ற வகை யில் திருவாரூரில் தொடங்கும் பிரச்சாரத்தில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். முதல மைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறோம். 2026ஆம் ஆண்டிற்கான திமுக தேர்தல் அறிக்கை தான் களத்தில் பேசு பொருளாகவும், இதுவரை வந்துள்ள தேர்தல் அறிக்கைகளில் சூப்பர் ஸ்டாராக வும் உள்ளது.
தேர்தல் அறிக்கையில் 525 வாக்குறுதி களை கொடுத்துள்ளனர். அவற்றை நிறைவேற்றி னால், அரசால் பயன்பெறாத குடும்பம் ஒன்று கூட இல்லை என்ற நிலை ஏற்படும். ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கு தமிழகத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் விரோதப் போக்கை இந்தக் கூட்டணி வலிமையாக எதிர்த்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதி தராதது, நிதி வழங்குவதில் பாரபட்சம், மாநில உரிமைகளை பறிப்பது, வெறுப்பு அரசியலை முன்னிறுத்துவது போன்ற வற்றிற்கு எதிராக பட்டிதொட்டி எங்கும் விவாதிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத அணுகுமுறை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெறும்.
முதலமைச்சரும் இதற்கு முக்கியத்து வம் கொடுப்பார். இவையெல்லாம் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெற உதவியாக இருக்கும். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பெ. சண்முகம் பதிலளித்தார். திமுக கடந்தமுறை கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதத்தை நிறைவேற்றியுள்ளது. சில வாக்குறுதி களை நிறைவேற்ற ஒன்றிய அரசு முட்டுக்கட்டை யாக இருந்துள்ளதை அமைச்சர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
ஒருசிலவற்றை நிறைவேற்ற நடைமுறை சாத்தியமில்லை என்று திமுக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. சாத்தியமிருந்தும் நிறைவேற்றாத வாக்குறுதி கள் என்னவென்பதை எடப்பாடி பழனிசாமி போன்ற வர்கள் கூறினால், அதை தெளிவுபடுத்த முடியும். தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவிகிதத்தை நிறை வேற்றி இருப்பது சாதனை. பிரதமர் மோடி கடந்த 3 தேர்தல்களில் கொடுத் துள்ள வாக்குறுதிகளில் 10-20 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக பெரும்பகுதி வாக்குறுதிகளை மோடி அளித்தார். இத்தகைய சூழலில், பாஜகவுடன் தேர்தல் உறவு கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. திசைமாறி அவர் கேள்வி கேட்கிறார். கடந்த முறை திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததை அடுத்து வந்து நிறைவேற்று வோம் என்று கூறுவது நல்லதுதானே.
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் எவை எவற்றை நிறைவேற்ற வில்லை என்று எடப்பாடி பழனிசாமி, அன்புமணி போன்றவர்கள் பட்டியல் கொடுக்கட்டும். பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை! தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் மதுக் கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுக்க வில்லை. பூரண மதுவிலக்கு நடைமுறை சாத்திய மற்றது. அரசு மதுபானம் விற்பதும், டாஸ்மாக் மது பானக் கடைகள் என்பதும் திமுக ஆட்சியில் உரு வாக்கப்பட்டதல்ல.
கடைகளின் எண்ணிக்கை, விற்பனை அளவை குறைக்க வேண்டும், குறிப்பிட்ட வயதுக்கு குறைவானவர்களுக்கு விற்கக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை கறாராக அமல்படுத்த வேண்டும். அதேநேரத்தில் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான மையங்களை அரசு உருவாக்க வேண்டும். குடி நோயாளிகளை மீட்க வேண்டும் என்பதை சமூகக் கடமையாக செய்ய வேண்டும். போதைப்பொருள் நடமாட்டம் காவல்துறை நடவ டிக்கை எடுத்த பிறகு தான் தெரிகிறது. எனவே, காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை. பல மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுகிறது. ஒன்றிய - மாநில அரசு கள் இணைந்து இவற்றை தடுக்க வேண்டும்.
மாநில அரசால் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. 100 சதவிகிதம் வெற்றி பெறுவது உறுதி தொகுதி உடன்பாடு ஏற்படுகிறவரை தோழமைக் கட்சிகளுக்குள் சச்சரவுகள் ஏற்படுவது இயல்பானது. மிகப்பெரிய கூட்டணிக்குள் இது தவிர்க்க முடியாது. உடன்பாடு ஏற்பட்ட பிறகு, 100 சதவிகிதம் வெற்றி என்ற இலக்கை நோக்கித்தான் அனைவரும் பயணிப்போம். தோழமைக் கட்சிகள் 100 சதவிகிதம் வெற்றிபெற திமுக அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவார்கள். தோழமைக் கட்சி தோற்றால், எதிரி வெற்றி பெறு கிறார் என்று பொருள். எதிரிகள் வெற்றி பெறு வதால் திமுகவிற்கு நன்மை இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 100 சதவிகிதம் வெற்றி பெறும். விஜய் மாற்றத்திற்கான தலைவர் அல்ல! புதிதாக வந்த தலைவர் என்பதற்காக அல்ல. திரையில் பார்த்த நடிகர் விஜய், தெருவுக்கு வந்திருக்கிறார் என்பதற்காகவே அவரை பார்க்க மக்கள் கூடுகிறார்கள். தேர்தல் வாக்களிப்பு, வாக்கு எண்ணிக்கையின் போது மக்கள் வேடிக்கை பார்க்க வந்தார்களா, வாக்களிக்க வந்தார்களா என்பது தெரியும். தமிழகத்தில் எங்கு சென்றாலும் விஜய்க்கு கூட்டம் வரும்.
ஆனால், அவரை மாற்று அரசியல் தலை வராக, ஆட்சி மாற்றத்திற்கான நபராக கடுகளவு கூட மக்கள் கருதவில்லை. தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம். காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். பாது காப்பில் குறைபாடு இருந்தால் தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்தைத் தான் அணுக வேண்டும். திமுக அரசின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ப தற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகளை தெரியா மல் பேசுகிறார். ஏப்ரல் 4 அன்று சிபிஎம் வேட்பு மனு தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்பது தெரியாமல் தலைமைச் செயலகம் செல் கிறார்.
புகார்களை எந்த எண்ணில் தெரிவிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை யெல்லாம் தெரிந்து புகார் செய்ய வேண்டும். திமுக ஆட்சி மீது ஏதாவது ஒரு புகார் கூறினால்தான், ஊட கத்தின் வெளிச்சம் படும் என்பதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறுகிறார். தவெக உருவானதிலிருந்தே திமுக - தவெக இடையே போட்டி என்று விஜய் கூறி வருகிறார். தமிழகத்தில் அதை யாரும் நம்பவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அவர் ஆபர் கொடுத்த பிறகும், அந்த ஆபரை வாங்க யாரும் செல்லவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் ஏப்ரல் 4 அன்று வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். இவ்வாறு சண்முகம் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் உடனிருந் தார்.
