tamilnadu

உலகச் செய்திகள்

தேர்தல் நிறைவு பெற்று 271 நாட்களுக்குப் பிறகு ஒரு வழியாக ஆட்சியை அமைக்கும் நிலைக்கு நெதர் லாந்து அரசியல் கட்சிகள் வந்துள்ளன. மார்ச் மாதத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. நான்கு கட்சிகள் இணைந்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாலும், அமைச்சர்களைத் தேர்வு செய்வதில் சிக்கல் இருப்பதால், ஜனவரி மாதத்தில்தான் ஆட்சியமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துனீசியாவின் நாடாளுமன்றத்தை தற்காலிக நீக்கம் செய்து வைத்திருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி கைஸ் சையது அறிவித்திருக்கிறார். டிசம்பர் 17,  2022 அன்று தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.  நாட்டின் அரசியல் அமைப்பு பற்றி பொது வாக்கெடுப்பு ஜூலை மாதம் நடைபெற விருக்கிறது. அது குறித்த மக்கள் கருத்துக்களைக் கேட்பதற் கான உரையாடல் நிகழ்ச்சிகளை அடுத்த மாதம் நடத்தப்போ வதாகவும் சையது தெரிவித்துள்ளார்.

65 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களில் நூற்றில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குழு கூறி யுள்ளது. 5 லட்சத்து 90 ஆயிரத்து 89 பேர் உயிரிழந்திருக்கி றார்கள். இதில் 75 வயது முதல் 84 வயது வரையிலானவர்கள் மட்டுமே 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் என்று அந்தக்குழு வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

;