tamilnadu

img

ஓய்வூதியமாக ரூ. 7850 வழங்க வேண்டும்! சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியமாக ரூ. 7850 வழங்க வேண்டும்! சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 10 - குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரத்து  850 ரூபாய் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதி யர் சங்கம் சார்பில் புதனன்று (செப்.10) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் கே. பழனிச்சாமி, “40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஓய்வூ தியர்களுக்கு 7 ஆயிரத்து 850 ரூபாய் ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி உடன்  கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்;  பண்டிகை முன்பணம் 6 ஆயிரம் ரூபாய்,  மருத்துவப்படி 300 ரூபாய் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் ஆயிரம்  ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். மருத்து வக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி இந்தப் போராட்டத்தை நடத்து கிறோம்” என்றார். முன்னதாக, போராட்டத்தை தொடங்கி வைத்து அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் நெ.இல. சீதரன் பேசினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. ராமமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநில முன்னாள் தலைவர் மு.அன்பரசு,  சங்கத்தின் பொருளாளர் சி. ராமநாதன், துணைத்தலைவர் பி. சித்திரைச்செல்வி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஏ. ஜெசி உள்பட தோழமைச் சங்கத் தலைவர்கள் உரையாற்றினர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் பொதுச்செயலாளர் பி. கிருஷ்ண மூர்த்தி நிறைவுரையாற்றினார்.