தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெறுக!
கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தல்
மயிலாடுதுறை, ஜூலை 20 - கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் (சிஐடியு) மாவட்ட பேரவை, மயிலாடுதுறை மாவட்டம் சிஐடியு அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.என்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் மயிலை எஸ்.வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் திருக்கடையூர் பி.ரவி, மாவட்ட துணைத் தலைவர் கொள்ளிடம் டி. தமிழ்செல்வன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் பி.சுந்தர் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் உரை யாற்றினார். ஸ்தாபன வேலையறிக்கையை மாவட்டச் செயலாளர் எல்.அந்தோணிசாமி வாசித்தார். மாவட்டத் தலைவராக எஸ்.என்.டி.எம். ரமேஷ், செயலாளராக எல்.அந்தோணி சாமி, பொருளாளராக எஸ்.பி.வேந்தன் உள்ளிட்ட 27 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிவித்து மாநிலப் பொருளாளர் பி.பார்த்த சாரதி நிறைவுரையாற்றினார். எப்.சி. இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஆன்-லைன் அபரா தத்தை முற்றிலும் கைவிட வேண்டும். சுங்க கட்டண உயர்வை குறைக்க வேண்டும். வாகன விரோத - தொழிலாளர் விரோதச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.