tamilnadu

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்க விழா

சாலை போக்குவரத்து  தொழிலாளர் சங்க  புதிய கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, செப். 18-  சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், திருச்சி புறநகர் மாவட்டம் புதிய கிளை துவக்க விழா மற்றும் சிறப்பு பேரவை புலிவலத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு காஜா மொய்தின் தலைமை வகித்தார். சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் மூர்த்தி, சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், தலைவராக கே.ஜெயராமன், பொதுச் செயலாளராக எஸ். சிவானந்தம், பொருளாளராக கே.முருகேசன் மற்றும் 8 துணை நிர்வாகிகள் உள்பட 17 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினரகள் தேர்வு செய்யப்பட்டனர். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.