tamilnadu

img

அரசு அலுவலகங்களில் சாய்தள படிக்கட்டுகள் அமைக்க கோரிக்கை

அரசு அலுவலகங்களில்  சாய்தள படிக்கட்டுகள் அமைக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக. 11-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய  4 ஆவது மாநாடு ஞாயிறன்று அம்மாபேட்டையில் நடந்தது.  மாநாட்டிற்கு, ஒன்றியத் தலைவர் குமார் தலைமை வகித்தார். நடராஜன் வரவேற்றார். சங்க  கொடியை மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபால் ஏற்றினார். மாவட்டச் செயலாளர் அந்தோணி சேகர்  துவக்க உரையாற்றினார்.  வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை ஒன்றியப் பொருளாளர் தனலெட்சுமி சமர்ப்பித்தார். அம்மாபேட்டை பங்குத்தந்தை லாரன்ஸ், அம்மா பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அழகப்பன், சிபிஎம் மணிகண்டம் ஒன்றியக்குழு உறுப்பினர்  தங்கராஜ், வேலுச்சாமி, மாவட்டப் பொருளாளர் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகையை ஆந்திர மாநிலத்தைப் போல் ரூ.10,000 மற்றும் கடும் ஊனத்திற்கு ரூ.15,000 என உயர்த்தி வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் சாய்தள படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக கணேசமூர்த்தி, செயலாளராக பாபு, பொருளாளராக சவரிமுத்து, துணைத் தலைவர்களாக குமார், மல்லிகா, துணைச் செயலாளராக நடராஜன், ஜெயந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பழனி யம்மாள் நன்றி கூறினார்.