tamilnadu

img

தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனே இயக்கம் செய்ய கோரிக்கை

தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை  உடனே இயக்கம் செய்ய கோரிக்கை

திருவாரூர், அக்.16- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில், திருவாரூர் மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவாரூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் முட்டைகளை உடனே இயக்கம் செய்திட வேண்டும். 2013-2016 பருவ கால ஊழியர்களை உடனே பணி நிரந்தரப்படுத்த வேண்டும். இயக்க இழப்பை காரணம் காட்டி பணி வழங்காத ஊழியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும். மண்டல அலுவலகத்தில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் ராஜா தலைமை வகித்தார். மண்டல துணைத் தலைவர் கே.ஜோதிபாசு, மண்டல துணைச் செயலாளர்கள் வைத்தியலிங்கம், விசாலாட்சி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். அக்.27 அன்று தலைமை அலுவலகம் முன்பு துவங்கும் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளையும், ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கியும் டிஎன்சிஎஸ்சி மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநிலச் செயலாளர் அண்ணாதுரை, சிஐடியு மாவட்டச் செயலாளர் அனிபா உள்ளிட்டோர் உரையாற்றினர்.