tamilnadu

சவளக்காரன் ஆதிதிராவிடர் நல பள்ளிக்கு கால்பந்து மைதானம் அமைத்துத் தர கோரிக்கை

சவளக்காரன் ஆதிதிராவிடர் நல பள்ளிக்கு கால்பந்து மைதானம் அமைத்துத் தர கோரிக்கை

மன்னார்குடி, ஆக. 25 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி கிளையின் 9 ஆவது மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு கிளைத் தலைவர் க.வீ.பாஸ் கரன் தலைமை வகித்தார். கோ. லெட்சுமி காந்தன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் மு. செளந்தரராஜன் துவக்கவுரையாற்றினார். கிளைச் செயலாளர்  தி.சிவசுப்பிரமணியன் வேலை அறிக்கையையும், பொருளாளர் கவிஞர் சரசுவதி தாயுமானவன் வரவு-செலவு  அறிக்கையையும் முன்வைத்தனர். மாநாட்டில், கிளைத் தலைவராக வீ.  கோவிந்தராஜ், செயலாளராக கே.அகோரம்,  பொருளாளராக யு.எஸ்.பொன்முடி ஆகி யோரை உள்ளடக்கிய 19 பேர் கொண்ட குழு  தேர்வு செய்யப்பட்டது. ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச் சட்டம் இயற்றிட வேண்டும். மன்னார் குடி வட்டம்  சவளக்காரன் ஆதிதிராவிடர்  நல மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில  அளவிலான தடகள போட்டிகளிலும், தேசிய  அளவிலான கால்பந்து போட்டிகளிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள்.  2026-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற விருக்கும் ஆசிய கால்பந்து போட்டிகளுக்கு  இப்பள்ளியில் படித்த மாணவி தகுதி பெற்றுள்ளார். இப்பள்ளி வீராங்கனைகளின் நீண்ட நாள் கனவான முழு அளவிலான கால்பந்து மைதானத்தை சவளக்காரனில் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாகவி பாரதியாருக்கு  மேல  நாகையில் மணிமண்டபமும், உருவச் சிலை யும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.