கலை பண்பாட்டு துறையின் மண்டல அலுவலகம் வேலூரில் துவக்க தமுஎகச மாநாடு வலியுறுத்தல்
வேலூர், செப்.28 - கலை பண்பாட்டு துறையின் மண்டல துணை அலுவலகம் வேலூரில் துவக்க வேண்டும் என்று தமுஎகச வேலூர் - திருப் பத்தூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16 வது மாநாடு வேலூரில் நடைபெற்றது. சகுவரதன், முல்லைவாசன், சினேகலதா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இணைச் செய லாளர் எஸ்.துர்கா தேவி அஞ்சலி தீர்மானம் வாசிக்க, டி.நேதாஜி வரவேற்றார். மாநிலத் துணைச் செயலாளர் உமா அமரநாதன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஶ்ரீராம் வேலை அறிக்கையையும், பொருளாளர் லோகேஷ் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்த னர்.அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பெ.அமுதா வாழ்த்துரை வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து நிறைவுரையாற்றினார். முடிவில் பால்தினகரன் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக சகுவரதன், செயலாளராக ஶ்ரீராம், பொருளாளராக தா.நேதாஜி உள்ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானம் நவ.18 தமிழ்நாடு தினத்தை முழுமை யான அரசு விழாவாக அனைத்து மாவட்டங் களிலும் கொண்டாட வேண்டும், மாவட்ட மைய நூலகத்திற்கு நிரந்தர நூலக அலு வலர் நியமிக்க வேண்டும், வேலூர் சிப்பாய் புரட்சி (ஜூலை 10) தினத்தை அனைத்து வட்டங்களில் கொண்டாட மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
