tamilnadu

img

33 மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்

33 மின்கல குப்பை சேகரிக்கும்  வாகனங்கள் வழங்கல்

பேராவூரணி - சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஊராட்சிகளுக்கு

தஞ்சாவூர், ஆக. 21-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள காலகம் ஊராட்சியில், காலகம், மாவடுகுறிச்சி, தென்னங்குடி ஆகிய ஊராட்சிப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.  பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் குத்துவிளக்கேற்றி, முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.  தொடர்ந்து, பேராவூரணி ஒன்றியத்தைச் சேர்ந்த 6 ஊராட்சிகளுக்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தலா ரூ.2.5 லட்சம் என, ரூ.27.50 லட்சம் மதிப்பிலான 11 மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கினார்.  இதேபோல், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 ஊராட்சிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான 22 மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்களை எம்எல்ஏ நா.அசோக்குமார் வழங்கினார்.  முன்னதாக, அம்மையாண்டி ஊராட்சியில் முத்துக்கருப்பன்ன சுவாமி கோயில் தார்ச்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ நா.அசோக்குமார் துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சிகளில், பேராவூரணி வட்டாட்சியர் நா.சுப்பிரமணியன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், செல்வேந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், மனோகரன், திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், செருவாவிடுதி பன்னீர்செல்வம், நாடங்காடு மோகன், நீலகண்டன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.