tamilnadu

img

முன்களப் பணியாளர்களுக்கு கையடக்க கணினி வழங்கல்

முன்களப் பணியாளர்களுக்கு கையடக்க கணினி வழங்கல்

புதுக்கோட்டை, ஆக. 19-  மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள 30 முன்களப் பணியாளர்களுக்கு ரூ.23,999 வீதம் ரூ.7,19,970 மதிப்பிலான கையடக்க கணினிகளை புதுக்கோட்டை ஆட்சியர் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 490 மனுக்களை பொதுமக்கள், ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், அர்வி டிரெஸ்ட் மூலம் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள 30 முன்களப் பணியாளர்களுக்கு ரூ.23,999 வீதம் ரூ.7,19,970 மதிப்பிலான கையடக்க கணினிகளை ஆட்சியர் வழங்கினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.புவனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.